வேலைவாய்ப்பு விகிதத்தில் இதுவரை இல்லாத சரிவு

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லின்­போது வேறு எந்த நெருக்­க­டி­கா­லத்­திலும் இல்­லாத அள­வுக்கு வேலை­வாய்ப்பு விகி­தம் குறைந்­தது. வர்த்­தக, தொழில் அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் இதைத் தெரி­வித்­தது.

முந்­தைய நெருக்­க­டி­க­ளின்­போது அவ்­வ­ளவு பாதிக்­கப்­ப­டாத சேவைத் துறை, கிரு­மிப் பர­வ­லால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டது. கிரு­மிப் பர­வல் தொடங்­கி­ய­தி­ லிருந்து இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டுக்­குள், சிங்­கப்­பூ­ரில் இருந்த வேலை வாய்ப்­பு­க­ளின் எண்­ணிக்­கை­யில் மொத்­தம் 196,400 குறைந்தன.

இதில் கடந்த ஆண்டு இரண்­டாம் காலாண்­டில் மட்­டும், அதா­வது கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ரான தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளின்­போது, 113,500 வேலை­கள் குறைந்­தன.

முந்­தைய காலங்­களில், ஒரு நெருக்­க­டி­யின் உச்­சத்­தி­லி­ருந்து முடிவு வரைக்­கும் வேலை­வாய்ப்­பின் விகி­தம் குறைந்­தி­ருக்­கிறது. உதா­ர­ணத்­துக்கு டாட்.காம் நெருக்­க­டி­கா­லத்­தின்­போது ஒட்­டு­மொத்த வேலை­களில் 79,500 வேலை­வாய்ப்­பு­கள் குறைந்­தன. ஆசிய பொரு­ளா­தார நெருக்­க­டி­யின்­போது, 42,100 வேலை­கள் இல்­லா­மல் போயின. உல­க­ளா­விய நெருக்­க­டி­யின்­போது 13,800 வேலை­வாய்ப்­பு­கள் குறைந்­தன.

ஆனால் இவற்றை எல்­லாம் விட கிரு­மிப் பர­வ­லால் ஏற்­பட்ட பொரு­ளி­யல் நெருக்­க­டி­யின்­போது வேலை­ இழப்புகள் அதிகம்.

முன்­னைய நெருக்­க­டி­க­ளைப் போல இல்­லா­மல், கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சிங்­கப்­பூர் பொரு­ளி­யலை ஐந்து வழி­களில் ஒரே நேரத்­தில் பாதித்­தது.

குறிப்­பாக இது கிரு­மிப் பர­வ­லின் ஆரம்ப கட்­டத்­தில் அதி­கம் ஏற்­பட்­டது, என்று வர்த்­தக, தொழில் அமைச்சு கூறி­யது.

அனைத்­து­ல­கப் பய­ணி­க­ளின் வரு­கை­யும் விமா­னப் பய­ணங்­களும் முடங்­கி­ய­தால், பய­ணத் துறை­யும் விமா­னத் துறை­யு­டன் தொடர்புடைய ஓட்­டல்­கள், விமா­னப் போக்­கு­வ­ரத்து போன்ற மற்ற துறை­களும் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டன.

அடுத்து சில்­லறை வர்த்­த­கம், உணவு பானத் துறை போன்­ற வற்றை­யும் பாதிக்­கப்­பட்­டன. பாது­காப்பு நட­வ­டிக்­கை­களும் உள்­நாட்டுப் வாடிக்கையாளர்கள் பயனீட்டைக் குறைத்­துக்­கொண்­ட­தும் இதற்­குக் கார­ணம்.

மூன்­றா­வ­தாக, தேவை வலு­ வி­ழந்­த­தா­லும் விநி­யோ­கச் சங்­கி­லி­யில் ஏற்­பட்ட இடை­யூ­று­க­ளா­லும் ஒட்­டு­மொத்த வர்த்­த­க­மும் நீர்ப் போக்­கு­வ­ரத்­தும் கடந்த ஆண்­டு­டின் பெரும்­ப­கு­திக்கு முடங்­கிப் போயின.

உள்­நாட்­டுப் பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் குறைந்­த­தால், கடந்த ஆண்­டி­லும் இவ்­வாண்டு தொடக்­கத்­தி­லும் சொத்­துச் சந்தை போன்ற துறை­களில் தேவை குறைந்­தது.

ஐந்­தா­வ­தாக, வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அதி­கம் பணி­யாற்­றும் கட்­டு­மா­னம், கடற்­துறை போன்­ற­வற்­றி­லும் சரிவு ஏற்­பட்­டது.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் ஏற்­பட்ட கிரு­மிப் பர­வல், எல்­லை­கள் மூடப்­பட்­டது, வேலை­யி­டங்­களில் கடைப்­பி­டிக்­கப்­பட்ட பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் போன்­றவை இதற்­குக் கார­ணம்.

இந்த ஐந்து வழி­களில் வேலை வாய்ப்­பு­களில் பெரும் சரிவு ஏற்­பட்­டது. குறிப்­பாக, உணவு பானத் துறை­யில் 21,100 வேலை வாய்ப்­பு­கள் இல்­லாது போயின. அடுத்து, ஒட்­டு­மொத்த வர்த்­த­கத் துறை­யும் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டது.

எனி­னும், தக­வல், தொடர்பு, நிதி, காப்­பீடு, நிபு­ணத்­து­வச் சேவை­கள் போன்ற துறை­களில் வேலை வாய்ப்­பு­கள் உரு­வா­ன­தாக வர்த்­தக, தொழில் அமைச்சு கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!