வங்கி இணையச் சேவை தடைப்பட்டதற்கு டிபிஎஸ் தலைமை நிர்வாகி குப்தா வருத்தம்

பத்­தாண்­டு­களில் சந்­தித்­தி­ராத மோச­மான மின்­னி­லக்க இடை­யூ­று­கள் கடந்த வாரம் வங்­கி­யின் வாடிக்­கை­யா­ளர்­களை எரிச்­ச­ல­டை­யச் செய்த பிறகு, டிபி­எஸ் வங்கி அதன் செயல்­மு­றை­கள் பற்­றிய முழு மதிப்­பாய்வை மேற்­கொள்­ளும்.

"வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு எங்­க­ளி­ட­மி­ருந்து அதி­கம் எதிர்­பார்க்க உரிமை உண்டு, அவர்­க­ளின் விரக்­தி­யை­யும் வேத­னை­யை­யும் பகிர்ந்து கொள்­கி­றேன். சேவை தடைக்கு மன்­னிப்பு கேட்­டுக்­கொள்­கி­றேன்," என்று டிபி­எஸ் வங்­கிக் குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி பியூஷ் குப்தா நேற்று ராய்ட்­டர்ஸ் மாநாட்­டில் தெரி­வித்­தார்.

கடந்த வாரம் குறைந்­த­பட்­சம் இரண்டு நாட்­க­ளுக்கு மின்­னி­லக்க வங்­கிச் சேவை­கள் முடங்­கி­ய­தால் கணக்கு வைத்­தி­ருப்­ப­வர்­க­ளால் தங்­கள் பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்ள முடி­யா­மல் போனது.

வங்­கி­கள் மின்­னி­லக்க மற்­றும் தொழில்­நுட்ப ரீதி­யாக மேம்­பட்டு வரு­வ­தால், வாடிக்­கை­யா­ளர்­க­ளின் எதிர்­பார்ப்­பு­களும் உய­ரும் என்று திரு குப்தா குறிப்­பிட்­டார்.

வங்கி அதன் செயல்­மு­றை­களை மறு­ப­ரி­சீ­லனை செய்து, சிறப்­பா­கச் செய்­வ­தற்­கான வழி­க­ளைக் கொண்டு வரும் என்­றார்.

கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று டிபி­எஸ் வங்கி அதன் அணு­கல் கட்­டுப்­பாட்டு சேவை­ய­கங்­களில் சிக்­கல்­களை எதிர்­கொள்­ளத் தொடங்­கி­யது, இது வாடிக்­கை­யா­ளர்­கள் வங்கி சேவை­களின் உள் நுழைவைத் தடுத்­தது. மறு­நாள் காலை பிரச்­சினை மீண்­டும் தலை­தூக்­கி­யது.

நவம்­பர் 25ஆம் தேதி அன்று, உள்­நு­ழை­வு­கள் மற்­றும் பரி­வர்த்­தனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள சில வாடிக்­கை­யா­ளர்­கள் இன்­னும் சிக்­கல்­களை எதிர்­கொண்­டா­லும், அன்று காலை இயல்பு நிலைக்கு திரும்­பி­யது என்­றும் இந்த இடை­யூறு இணை­யத் தாக்­கு­த­லால் ஏற்­ப­ட­வில்லை என்­றும் வாடிக்­கை­யா­ளர் தரவு பாது­காப்­பாக இருப்­ப­தா­க­வும் டிபி­எஸ் கூறி­யது.

இந்­தப் மின்­ன­லிக்க செய­லி­ழப்பு குறித்து "மேற்­பார்வை நட­வ­டிக்கை" மேற்கொள்ளப் போவதாக சிங்­கப்­பூ­ரின் நாணய ஆணை­யம் கடந்த வாரம் தெரி­வித்­தது.

வாடிக்­கை­யா­ளர் சேவை­க­ளைப் பாதிக்­கும் முக்­கி­ய­மான செயல்­முறைகளுக்­கான மொத்த திட்­ட­மி­டப்­ப­டாத வேலை­யில்லா நேரம் எந்த 12 மாத காலத்­திற்­குள்­ளும் நான்கு மணி­நே­ரத்­திற்கு மிகா­மல் இருப்­பதை நிதி நிறு­வ­னங்­கள் உறுதி செய்ய வேண்­டும் என்று ஆணை­யம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!