கலைக்காக வாழ்ந்தவரின் உயிர் கலை நிகழ்ச்சியிலேயே பிரிந்தது

கலையை உயிர்­மூச்­சா­கக் கொண்டு வாழ்ந்த நட­னக் கலை­ஞர் திரு­மதி சாந்தா பாஸ்­க­ரின் உயிர் கலை நிகழ்ச்சி மேடை­யி­லேயே பிரிந்­தது.

வாட்­டர்லூ சென்­ட­ரில் பாஸ்­கர் ஆர்ட்ஸ் கலைக்­க­ழ­கத்­தின் 70ஆம் ஆண்டு நிறை­வுக் கொண்­டாட்ட தொடக்க நிகழ்­வான 'சங்­கீத சப்­ததி' இரண்­டா­வது நாளான சனிக்­கி­ழமை நடந்­தது.

நிகழ்ச்சி மேற்­பார்­வை­யில் சுறு­சு­றுப்­பாக இயங்­கிக்­கொண்­டி­ருந்த அவர், நிகழ்ச்சி தொடங்­கு­வ­தற்கு சிறிது நேரத்­துக்கு முன்­னர் திடீ­ரென மூச்­சு­விட சிர­மப்­பட்­டார். டான் டோக் செங் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட அவர் அங்கு இரவு 8.15 மணி­ய­ள­வில் உயி­ரி­ழந்­த­தாக அறி­விக்­கப்­பட்­டது.

மோகன் பாஸ்­கர், ராம் பாஸ்­கர், மீனாட்சி பாஸ்­கர் ஆகிய மூன்று பி்ள்ளை­கள், நான்கு பேரப் பிள்­ளை­கள், ஒரு கொள்­ளுப் பேரன் ஆகி­யோ­ரு­டன் தனது ஏரா­ள­மான மூன்று தலை­முறை கலைக் குழந்­தை­க­ளை­யும் விட்­டுச் சென்­றுள்­ளார்

சிங்­கப்­பூ­ரின் உய­ரிய கலை, இலக்­கிய விரு­தான கலா­சா­ரப் பதக்­கம் வென்ற மூத்­தக் கலை­ஞ­ரான திரு­மதி சாந்தா பாஸ்­க­ருக்கு வயது 82. சிங்­கப்­பூ­ரின் கலைச் சின்­னங்­களில் ஒரு­வ­ரான அவர் கடந்த ஆண்­டின் மாதர் தினத்தை ஒட்டி சிங்­கப்­பூ­ரின் புகழ்­பெற்ற மாதர் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்­டார்.

"70 ஆண்டு நிறை­வுக் கொண்­டாட்­டத்தை வெள்­ளிக்­கி­ழமை இரவு அவர் தொடங்­கி­வைத்­தார். இந்த ஆண்டு முழு­வ­தும் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தார். அவற்றை நாங்­கள் தொடர்­வோம் என்ற நம்­பிக்­கை­யோடு அவர் விடை­பெற்­ற­தா­கக் கரு­து­கி­றோம்," என்­றார் பாஸ்­கர் ஆர்ட்ஸ் அகா­ட­மி­யின் கலை நிர்­வாகி திரு­மதி தவ­ராணி.

"எங்­கள் இசைக்­கச்­சேரி தொடங்­கி­ய­போது, அவர் தனது இறு­திப் பய­ணத்­தைத் தொடங்­கி­விட்­டார். கலை­யோடு கலந்­து­விட்­டார். 1958ஆம் ஆண்டு அவர் நட­ன­மாட குற்­றா­லக் குற­வஞ்­சிப் பாட்டை நாங்­கள் பாடி­னோம். அவர் இழப்பு ஈடு செய்­ய­மு­டி­யா­தது," என்­றார் பாஸ்­கர் கலைக்­க­ழ­கத்­தில் வளர்ந்த குழ­லி­சைக் கலை­ஞர் கான­வி­னோ­தன் ரத்­னம்.

சிங்­கப்­பூ­ரில் கலை­கள் மிளி­ரக் கார­ண­மா­ன­வர்­களில் பாஸ்­கர் தம்­ப­தி­யர் குறிப்­பி­டத்­தக்­க­வர்­கள் என்று நினை­வு­கூர்ந்­தார் திரு­மதி சாந்தா பாஸ்­க­ரின் முதல் மாண­வி­களில் ஒரு­வ­ரான திரு­மதி கலை­ம­கள் வடி­வேல், 72.

தம்­மை­விட 14 வயது மூத்­த­வ­ரான சிங்­கப்­பூ­ரின் முன்­னோ­டிக் கலை­ஞர் அம­ரர் பாஸ்­கரை 1955ல் திரு­ம­ணம் செய்து, தம்­மு­டைய 16வது வய­தில் கேரளாவி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த திரு­மதி சாந்தா பாஸ்­கர், 70 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சிங்­கப்­பூ­ரின் கலைத்­து­றைக்­குப் பெரும் பங்­காற்­றி­னார். பல நட­னக்­க­லை­ஞர்­களை உரு­வாக்­கி­னார். உள்­ளூ­ரி­லும் வெளி­நாடு களி­லும் எண்­ணற்ற நிகழ்ச்­சி­க­ளைப் படைத்­தார். பல கலா­சா­ரத் தன்­மையை நட­னத்­தில் புகுத்­திய முன்­னோ­டி­யான அவர், 1950களி­லேயே பாலே பயிற்சி பெற்ற கோ லே குவான், மலாய் நட­னக் கலை­ஞர் சோம் சைட் போன்ற நண்­பர்­க­ளி­டம் மற்ற நட­னங்­களில் கூறு­க­ளைக் கற்று நட­னங்­களை அமைத்­தார். ஜூ சியாட்­டில் அண்­டை­வீட்­டா­ராக இருந்த தேசி­ய­கீ­தத்தை இயற்­றிய இசை­ய­மைப்­பா­ளர் ஜூபிர் சைட்­டு­டன் சேர்ந்து பணி­யாற்­றி­யுள்­ளார்.

"அவர் ஒரு இரும்­புப் பெண்­மணி. எதற்­கும் தயங்­க­மாட்­டார். புதிய தொழில்­நுட்­பம், புதிய முறை­க­ளைக் கற்­றுக்­கொள்­ளத் தயங்­கவே மாட்­டார். அவ­ரின் நடன அமைப்­பு­கள் பிரம்­மாண்­ட­மா­க­வும் வித்­தி­யா­ச­மா­க­வும் இருக்­கும். அவர் மிக மிகப் பணி­வா­ன­வர். எப்­போ­தும் எல்­லா­ரு­ட­னும் அன்­போ­டும் கனி­வோ­டும் பேசு­வார்," என்­றார் இளைய நட­ன­மணி 22 வயது விஷ்­ணு­பி­ரியா.

"மலாய், சீன நட­னக்கூறுகளை இணைத்து நட­னங்­களை வடி­வ­மைப்­பது அவ­ரின் சிறப்பு. மிக­வும் புத்­தாக்­க­மாக சிந்­திப்­ப­வர்," என்­றார் மற்­றொரு மாண­வி­யான பிரி­ஷா­லினி, 25.

நட­ன­ம­ணி­யாக, இயக்­கு­ந­ராக, நிர்­வா­கி­யாக, பல்­வேறு பணி­களை தமது கண­வர் அம­ரர் பாஸ்­க­ரு­டன் இணைந்து செயல்­பட்ட அவர், திரு பாஸ்­க­ரின் மறை­வுக்­குப் பின்­னர் பாஸ்­கர் கலைக் கழ­கத்தை தொடர்ந்து வழி­ந­டத்தி வந்­தார். கொவிட்-19 சூழ­லி­லும் பல நிகழ்ச்­சி­களை மேடை­யேற்­றி­னார்.

எண் 91, தெம்­ப­னிஸ் லிங்­கில் உள்ள 'சிங்­கப்­பூர் ஃபூனரல் பார்­லரி'ல் வைக்­கப்­பட்­டுள்ள திரு­மதி சாந்தா பாஸ்­க­ரின் உட­லுக்கு இன்­றும் நாளை­யும் அஞ்­சலி செலுத்­த­லாம். கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக, அஞ்­சலி செலுத்த விரும்­பு­வோர் முன்­ன­தா­கவே பதி­வு­செய்ய கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­னர்: https://celebratingsantha.youcanbook.me/

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!