குடும்பத்துடன் ஒன்றிணையும் ராஜாவின் கனவு கொவிட் கிருமித்தொற்றால் கலைந்தது

திரு டி. ராஜா குமார் தனது இரண்டு சிறு குழந்­தை­க­ளுக்­கும் அவ­ரது உற­வி­னர்­க­ளுக்­கும் மிட்­டாய்­கள், பொம்­மை­கள் உட்­பட பல பரி­சு­களை வாங்­கி­னார்.

இம்­மா­தம் 1ஆம் தேதி திருச்­சி­ராப்­பள்ளி நக­ருக்கு விமா­ன­ம் மூலம் தான் செல்ல வேண்­டிய பய­ணத்­துக்கு முன், தன்­னி­டம் கடை­சி­யாக மிஞ்­சி­யி­ருந்த $500ஐ தன் மனை­விக்கு அனுப்பி வைத்­தார். நான்கு ஆண்­டு­கள் இங்கு பணி­பு­ரிந்த பிறகு அவர் தனது குடும்­பத்­து­டன் மீண்­டும் இணை­யப் போவது குறித்து மகிழ்ச்­சி­யாக இருந்­தார்.

ஆனால் கடந்த ஆண்டு செப்­டம்­ப­ரில் தனது இரண்­டா­வது கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட திரு ராஜா, பிப்­ர­வரி 26 அன்று, விமா­னப் பய­ணத்­துக்­குத் தேவை­யான பிசி­ஆர் பரி­சோ­த­னை­யில் தோல்­வி­ய­டைந்­ததை அறிந்து அதிர்ச்­சி­யுடன் மன­மு­டைந்­தும் போனார்.

கடந்த ஜன­வரி 26ஆம் தேதி முதல் முறை­யாக கிரு­மித்­தொற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தற்கு பிறகு திரு ராஜா­வுக்கு பிப்­ர­வரி 26ஆம் தேதி­யன்று இரண்­டா­வது முறை­யாக கிரு­மித்­தொற்று கண்­டு­பி­டிக்­கப்பட்­டது.

சாரக்­கட்டு அமைக்­கும் ஊழி­ய­ரான திரு ராஜா, "எப்­படி மீண்­டும் இவ்­வ­ளவு விரை­வில் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டேன்? இந்த நேரத்­தில் எனக்கு உடம்பு சரி­யில்­லா­மல் இருந்­த­தில்லை," என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னார்.

கடந்த புதன்­கி­ழமை திரு ராஜாவை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் சந்­தித்­த­போது, "என் மனைவி, குழந்­தை­க­ளி­டம் எனக்­குக் கிரு­மித்­தொற்று இருப்பதை சொன்ன போது தொலை­பே­சி­யில் அவர்­கள் அழு­வ­தைக் கேட்டு, நான் உடைந்து விட்­டேன்," என்­றார்.

திருச்சி விமான நிலை­யத்­தி­லி­ருந்து அவரை அழைத்­துச் செல்­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் ரத்து செய்யப்பட்டது. விமான நிலை­யத்­திற்கு 110 கிலோ­மீட்­டர் பய­ணத்­திற்­கான வாகன வாடகை வைப்­புத் தொகை பறி­மு­தல் செய்­யப் பட்­டது.

இம்­மா­தம் 2ஆம் தேதி காத்­தோங்­கில் உள்ள ஒரு ஹோட்­ட­லில் இரண்டு இரவு தங்­கிய பிறகு தனி­மைப்­ப­டுத்­த­லில் இருந்து விடு­விக்­கப்­பட்­டார். இன்­னும் 12 நாட்­களில் ராஜா விமா­னம் மூலம் வீடு திரும்­பு­வார்.

ராஜா­வைப் போலவே மற்­றோர் ஊழி­ய­ரும் இந்த இக்­கட்­டான நிலைக்கு ஆளா­னர். 40 வய­தான திரு பி. மணி­கண்­டன் எனும் கட்­டு­மான ஊழி­யர், மூன்று முறை நோய்த்­தொற்­றுக்கு ஆளா­னார் என்று கூறி­னார் அவ­ரது முத­லாளி திரு சல்­மான்.

ஜூலை 2020ல், திரு மணி­கண்­ட­னும் மற்றொரு நிறு­வ­னத்­தில் உள்ள ஏழு பேரும் கொவிட்-19 கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

திரு மணி­கண்­டன் குண­ம­டைந்த பிறகு, கடந்த ஆண்டு ஜூலை மாதம், அவ­ருக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டது.

ஆனால் இந்த ஆண்டு ஜன­வரி 22 ஆம் தேதி, திரு மணி­கண்­ட­னுக்கு இரண்­டா­வது முறை­யாக தொற்று ஏற்­பட்­டது.

திரு ராஜா­வைப் போலவே திரு மணி­கண்­ட­னும் இந்­தி­யா­வுக்­குத் திரும்­பத் திட்­ட­மிட்­டி­ருந்­தார். துர­தி­ருஷ்­ட­வ­ச­மாக, அவர் பிப்­ர­வரி 28ஆம் தேதி பய­ணத்­திற்கு முந்­தைய பிசி­ஆர் பரி­சோ­த­னை­யில் தோல்­வி­ய­டைந்­தார்.

சிங்­கப்­பூரை விட்டு வெளி­யேறி, இப்­போது தொடர்­பு­கொள்ள முடி­யாத திரு மணி­கண்­டன் சார்­பா­கப் பேசிய திரு சல்­மான், "எனது ஊழி­யர் எந்­தப் பிரச்­சி­னை­யும் இன்றி சிங்­கப்­பூரை விட்­டுச் சென்­றதை உறு­தி­செய்­யும் முயற்சி ஏமாற்­ற­மாக இருந்­தது.

"அவ­ருக்கு இரண்டு கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­ட­தற்­கான ஆவ­ணங்­கள் இல்­லா­த­தால், விமான நிறு­வ­னம் அவருக்கு விமானத்தில் ஏற அனு­ம­திக்க மறுத்­தது.

"மணி­கண்­டன் முன்பு கொவிட்-19 கிரு­மித்­தொற்று இருந்­த­ தா­க­வும், அவ­ருக்கு இரண்டு தடுப்­பூசி போடு­வ­தற்­குப் பதி­லாக ஒரே ஒரு தடுப்­பூசி போடப்­ப­டு­வது இயல்­பா­னது என்­றும் விமான நிறு­வன மேலா­ள­ரி­டம் சொன்­னேன்," என்­றார்.

திரு மணி­கண்­டன் குண­மடைந்­த­தற்­கான அறிக்­கை­யைக் காட்­டிய பிறகே அவ­ரது பய­ணத்தை எளி­தாக்க விமான நிறு­வ­னம் ஒப்­புக்­கொண்­டது.

51 வய­தான திரு சல்­மான், ஊழி­யர்­க­ளைத் திருப்பி அனுப்­பும்­போது மற்ற முத­லா­ளி­களும் இதே பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­ளக்­கூ­டும் என்று கவ­லைப்­பட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் ஓர் ஊழி­யரை நீண்­ட­கா­லம் தங்க வைக்­கும்­போது, கருத்­தில் கொள்ள வேண்­டிய தள­வா­டச் சிக்­கல்­கள் உள்­ளன.

அவர்­களின் வொர்க்­பர்­மிட் ரத்து செய்­யப்­பட்ட நிலை­யில், சிறப்பு அனு­மதிச் சீட்­டுக்கு விண்­ணப்­பிக்க வேண்­டும். உணவு, தங்­கு­மி­டம், புதிய விமான டிக்­கெட்­டு­கள் வாங்க வேண்­டும்.

"இந்த நிலை­யி­லும் கூட, முத­லா­ளி­கள் பல நிச்­ச­ய­மற்ற தன்­மை­க­ளை­யும் சிர­மங்­க­ளை­யும் எதிர்­கொள்­கின்­ற­னர்" என்று திரு சல்­மான் முந்­தைய பேட்­டி­யில் கூறி­னார்.

தாம் விரை­வில் தனது குடும்­பத்­தைப் பார்க்­கப் போகி­றோம் என்று நிம்­ம­தி­யாக இருந்­தா­லும், ​​ மீண்­டும் தொற்று ஏற்­ப­டுமோ என்ற பயம் அவ­ருக்கு உள்­ளது.

திரு ராஜா போன்ற ஊழி­யர்­கள் முன்பு பணி­யி­டங்­களில் வழக்­க­மான பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர். ஆனால் அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு தடுப்­பூசி போடப்­பட்­ட­தால், கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் நிர்­ண­யிக்­கப்­பட்ட வழக்­க­மான பரி­சோ­தனை இனி தேவை­யில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

"நான் எனது அறை­யில் தங்­கி­யி­ருக்­கி­றேன். மக்­க­ளி­ட­மி­ருந்து விலகி இருக்­கி­றேன். இப்­போது என்­னி­டம் பணம் எது­வும் இல்லை.தங்­கு­மி­டத்­தின் இல­வச வைஃபை யைப் பயன்­ப­டுத்­து­வதே என் குடும்­பத்­தி­ன­ரு­டன் பேசு­வ­தற்­கான ஒரே வழி," என்­று சோகத்துடன் கூறி னார் திரு ராஜா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!