சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை திங்கள்கிழமை (மார்ச் 7) நிலவரப்படி 13,520ஆக இருந்தது. 1,477 பேர் மருத்துவமனைகளில் சிகிச்கை பெற்று வந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 54 பேர் உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 13,158 பேருக்குத் தொற்று உறுதியானது. மருத்துவமனைகளில் சிகிச்கை பெறுவோரின் எண்ணிக்கை 1,437ஆக இருந்தது.
கொவிட்-19க்கு மேலும் ஆறு பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 149 பேருக்குத் தொற்று உறுதியானது.
வாராந்திர தொற்று விகிதம் திங்கள்கிழமை அன்று 0.95ஆக இருந்தது. தொடர்ந்து ஆறாவது நாளாகத் தொற்று விகிதம் ஒன்றுக்குக் கீழ உள்ளது.