சில பலதுறை மற்றும் ‘பிஎச்பிசி’ மருந்தகங்களில் கொவிட்-19 மாத்திரை விநியோகம்

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்­கான புதிய கிருமி எதிர்ப்பு மாத்­தி­ரை­யான பாக்ஸ்­லோ­விட் (படம்), நோயா­ளி­கள் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பைக் குறைக்க, தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பல­துறை மருந்­த­கங்­க­ளி­லும் பிஎச்­பிசி எனும் பொதுச் சுகா­தா­ரத் தயார்­நிலை மருந்­த­கங்­க­ளி­லும் படிப்­ப­டி­யாக விநி­யோ­கிக்­கப்­படும்.

இங்கு பயன்­ப­டுத்த சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட முதல் கொவிட்-19 மாத்­திரை இது­வா­கும். ஃபைசரின் மருத்­துவ ஆய்­வு­கள் மூலம் இதில் சில பக்­க­வி­ளை­வு­கள் இருப்­ப­தாக ஆணை­யம் குறிப்­பிட்­டது.

தற்­போது, சமூக அள­வில் இரு­மல், காய்ச்­சல், தொண்டை வலி போன்ற அறி­கு­றி­க­ளின் அடிப்­ப­டை­யில் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது.

பல­துறை மருந்­த­கங்­கள், பிஎச்­பிசி மருந்­த­கங்­களில் கடு­மை­யான கொவிட்-19 ஆபத்­தில் உள்ள நோயா­ளி­கள், நோய் தொடங்­கிய ஐந்து நாட்­க­ளுக்­குள் இருக்­கும் நோயா­ளி­கள் இந்த மாத்­தி­ரைக்­குத் தகு­தி­யு­டை­ய­வர்­கள். ஆனால் இது எப்­போது வெளி­யி­டப்­படும் என்று குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

அர­சாங்க மற்­றும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் கடு­மை­யான நோய் அபா­யத்­தில் உள்ள தகு­தி­யான நோயா­ளி­களும் இந்த மருந்­தைப் பெற­லாம். ஐந்து நாட்­க­ளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த மருந்து எடுத்துக்கொள்ளப்பட வேண்­டும். மேலும் அறி­கு­றி­கள் தோன்­றிய ஐந்து நாட்­க­ளுக்­குள் முடிந்­த­வரை விரை­வில் கொடுக்­கப்­பட வேண்­டும்.

ஒரு குறிப்­பிட்ட காலத்­திற்கு, தகு­தி­யான முதன்மை பரா­ம­ரிப்பு அமைப்­பு­களில் பயன்­ப­டுத்­தப்­படும் பாக்ஸ்­லோ­விட்டுக்­கான செலவை அது முழு­மை­யாக ஈடு­செய்­யும் என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

இந்த மருந்து ஐந்து நாள் உட்­கொள்­வ­தற்­காக அமெ­ரிக்க அர­சாங்­கத்­துக்கு US$530 (S$720) செல­வா­கும்.

"அதிக ஆபத்­துள்ள நோயா­ளி­கள் கடு­மை­யான கொவிட்-19 நோயால் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தைக் குறைப்­பதே முக்­கிய நோக்­க­மா­கும்.

"குறிப்­பாக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கும் இந்த கால­கட்­டத்­தில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் இன்­னும் குறிப்­பி­டத்­தக்க அழுத்­தத்­தில் உள்­ள­னர்," என்று சுகா­தார அமைச்சு மேலும் கூறி­யது.

நோய் எதிர்ப்பு குறை­பா­டுள்ள நோயா­ளி­கள், முதி­யோர்், புற்­று­நோய், கடு­மை­யான நுரை­யீ­ரல், இத­யம் அல்­லது சிறு­நீ­ரக நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் அடங்­கு­வர்.

இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு ஒரு சில நோயா­ளி­க­ளுக்கு மருந்தை வழங்­கத் தொடங்­கி­யுள்­ள­தா­க­வும் இது ஏற்­கெ­னவே அர­சாங்க மருத்­து­வ­ம­னை­களில் பயன்­படுத்­தப்­ப­டு­வ­தா­க­வும் தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­யது.

அதன் பயன்­பாட்­டைக் கட்­டுப்­படுத்த கடு­மை­யான விதி­மு­றை­கள் உள்­ளன என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

நடை­மு­றை­யில் உள்ள வழி­காட்­டு­த­லின்­படி மருந்து பரிந்­து­ரைக்­கப்­ப­டு­வதை உறுதி செய்­வ­தற்­காக கண்­கா­ணிப்பு செயல்­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்த தொற்­று­நோய்­களுக்­கான தேசிய நிலை­யத்­து­டன் இணைந்து பணி­யாற்­று­வ­தாக அமைச்சு மேலும் கூறி­யது.

இந்த மருந்தை சமூக அள­வில் பயன்­ப­டுத்­தும் முதல் நாடு சிங்­கப்­பூர் அல்ல. கனடா இந்த ஆண்டு ஜன­வ­ரி­யில் இந்த மருந்தை பயன்­படுத்த தொடங்கிவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!