‘டேசருக்கு’ அடங்காத நபர்

பெண்­ட­மி­ய­ர் சாலையில் கத்­தியை ஏந்­திய ஓர் ஆட­வர் காவல்­து­றை­யி­ன­ரைத் தாக்க முயன்­றி­ருக்­கி­றார்.

'டேசர்' எனும் ஒரு­வ­ரைத் தற்­கா­லி­க­மா­கச் செய­லி­ழக்க வைக்­கும் கரு­வி­யைக் கொண்டு காவல்­து­றை­யி­னர் 64 வயது இங் எங் குய் எனும் அந்த ஆட­வ­ரை எதிர்கொண்டனர். ஆனால் அவர் அதற்கு அடங்­க­வில்லை. அத­னால் அதி­காரி­கள் துப்­பாக்­கி­யால் அவ­ரைச் சுட்­ட­னர்.

இங், பின்­னர் மருத்­து­வ­ம­னை­யில் மாண்­ட­தா­கக் காவல்­துறை நேற்று முன்தினம் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தது.

"டேசர் கரு­வி­யைக் கொண்டு ஒருவரை எப்­பொ­ழு­தும் செய­லி­ழக்க வைக்­க­மு­டி­யாது, ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஏற்படும் பாதிப்பு மாறு­ப­ட­லாம், செய­லி­ழக்­கச் செய்­யும் டேச­ரின் அம்புகள் உட­லின் எந்­தப் பகு­தி­களைத் தாக்­கு­கின்­றன என்­ப­தைப் பொருத்து பாதிப்பு ஏற்­படும்," என்று காவல்­து­றைக்­கானப் பேச்­சா­ளர் கூறி­னார்.

'டேசர்' கரு­வி­யைக் கொண்டு 50,000 வோல்ட் மின்­சா­ரத்தை உட­லில் செலுத்தி ஒரு­வ­ரைத் தற்­காலி­க­மா­கச் செய­லி­ழக்க வைக்­க­மு­டி­யும். அதி­கா­ரி­கள் அதைப் பயன்­ப­டுத்­தும்­போது இரண்டு சிறிய மின்­சார அம்­பு­கள் ஒரு­வ­ரின் தோலில் ஒட்­டிக்­கொண்டு அவ­ரைச் செய­லி­ழக்­கச் செய்­யும்.

சில வேளை­களில் மின்­சார அம்­பு­கள் உட­லில் சரி­யா­கப் பாய்ச்­சப்­படாமல் இருக்­க­லாம் அல்­லது அவை ஒருவரின் ஆடை­யில் சிக்­கலாம். அப்­ப­டிப்­பட்ட சூழ­லில் தாக்­கப்­பட்ட ஆட­வரை எதிர்­பார்த்­த­படி செய­லி­ழக்க வைக்­க­மு­டி­யாது.

மேலும், உட­லில் பாய்ச்­சப்­பட்ட இரு மின்­சார அம்­பு­க­ளுக்­கும் இடையே குறைந்­தது 30 செண்­டி­மீட்­டர் அளவு இடை­வெ­ளி­யா­வது இருக்­க­வேண்­டும். இல்­லா­வி­டில் தாக்­கப்­பட்­ட­வர் எதிர்­பார்த்­த­படி செய­லி­ழந்து போகாமல் இருக்­க­லாம்.

சிங்கப்பூர் காவல்துறையினர் முதன்முதலில் 2005ஆம் ஆண்டு 'டேசர்' கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

அப்­போது கேலாங், புக்­கிட் மேரா அக்­கம்­பக்­கத்­துக் காவல் நிலை­யங்­கள் அவற்றை உப­யோகித்தன.

இச்சம்பவம் நேற்று முன்தினம் பெண்டமியர் சாலையில் உள்ள வீவக புளோக் 33ல் நிகழ்ந்தது. காவல்துறையினரைக் கத்தியால் தாக்க முயன்ற இங், போதைப் பொருள் குற்றவாளி என்று தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்­தி­னம் பிற்­ப­கல் நான்கு மணி­ய­ள­வில் அவர் கத்தியை ஏந்­தி­ய­படி கூச்சலிட்டபடி புளோக்­கின் அடித்­த­ளத்­தில் நடந்­து­கொண்­டி­ருந்­தார்.

அதி­கா­ரி­கள் அங்கு வந்­த­போது புளோக்­கின் ஆறா­வது மாடி­யில் இருக்­கும் வீட்­டி­லி­ருந்து அவர் வெளியே வந்­தார்.

கத்­தி­யைக் கீழே போடு­மாறு அதி­கா­ரி­கள் அவ­ரைக் கேட்­டுக்­கொண்­ட­னர். ஆனால் இங் அவ்­வாறு செய்ய மறுத்­ததுடன் அவர்­களை நோக்­கிச் சென்­றார்.

தங்களின் உயிருக்கு ஆபத்து இருந்ததால் 'டேசர்' தாக்குதலுக்கு அடங்காத இங்கை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டனர். மாலை சுமார் 5.13 மணிக்கு இங் உயி­ர்­இழந்­தது உறு­தி­செய்­யப்­பட்­டது.

முன்­ன­தாக இங் சீருடை அணிந்­தி­ருந்த மாண­வர் ஒரு­வரை நோக்­கிச் சென்­ற­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் அந்த மாண­வர் பாது­காப்­பாக அங்­கி­ருந்து சென்று­விட்­டார்.

மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு தேடி­வந்த இங்­கின் வீட்­டில் போதைப் பொருள் சம்­பந்­தப்­பட்ட பொருள்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!