சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முன்கள வீரர்களுக்கு உடலோடு அணியும் புகைப்படக் கருவிகள்

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும் செயலாக்க அதிகாரிகளும் உடலோடு ஒட்டிய புகைப்படக் கருவிகளை அணியவுள்ளனர்.

வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 15ஆம் தேதி இது நடப்புக்கு வரும்.

இந்த கேமராக்கள் எவ்வளவு பயனுள்ளவை என்பதைக் கண்டறிய தேர்வுசெய்யப்பட்ட அதிகாரிகளும் மருத்துவ உதவியாளர்களும் தலைக்கவசத்திலும் உடலிலும் அணிந்து முதற்கட்ட ஆய்வுகளில் கலந்துகொண்டனர்.

அவற்றில் கிடைத்த காணொளிகள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

தீயணைப்பு மீட்பு அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள், அபாயகரமான பொருள்களைக் கையாளும் நிபுணர்கள், தீ பாதுகாப்பு மற்றும் அபாயகரமாக பொருள்களுக்கான செயலாக்க அதிகாரிகளுக்கு உடலோடு ஒட்டிய புகைப்பட கருவிகள் வழங்கப்படும்.

அடுத்த கட்டத்தில் உடலில் அணியும் புகைப்படக் கருவிகளில் கிடைக்கும் காணொளிகள் பயிற்சி பெறுவதற்கும் பயிற்சி அளிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

"சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் பொதுமக்களும் தொடர்புகொள்ளும்போது கூடுதல் பொறுப்புணர்வையும் வெளிப்படைத் தன்மையையும் உடலில் அணியும் புகைப்படக் கருவிகள் உறுதிசெய்யும். பொதுமக்கள் அதிகாரிகளிடம் தகாத வகையில் நடந்துகொள்ளவதையும் இது தவிர்க்கும்," என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அவசர அழைப்புகளை ஏற்றுச் செல்லும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அதிகாரிகளுக்கு தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் ஆறு ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையை 2021ல் எட்டியது.

அத்தகைய 29 சம்பவங்கள் நடந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!