ஜோகூரிலிருந்து வரும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் இனி எஸ்ஜி வருகை அட்டையை நிரப்பத் தேவையில்லை

முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி பெற்றவர்கள் ஆகியோர், இனி தரை வழி சிங்கப்பூருக்குள் நுழையும்போது சோதனைச்சாவடிகளில் சுகாதார உறுதிமொழியை நிரப்பித் தரத் தேவையில்லை.

வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 15) இது நடப்புக்கு வருகிறது.

இருப்பினும், லிமானம்வழி அல்லது கப்பலில் சிங்கப்பூருக்குள் நுழையும் எல்லா பயணிகளும் தொடர்ந்து எஸ்ஜி வருகை அட்டையை நிரப்ப வேண்டும்.

குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் புதன்கிழமை (ஏப்ரல் 13) அன்று இதைத் தெரிவித்தது.

உட்லண்ட்ஸ் துவாஸ் சோதனைச்சவாவடிகளில் உள்ள போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு தரை வழி நாட்டுக்குள் நுழையும்போது எஸ்ஜி வருகை அட்டையை நிரப்பத் தேவையில்லை எனும் முடிவு எடுக்கப்பட்டதாக ஆணையம் கூறியது.

இந்த நடவடிக்கைக்குத் தகுதி பெற, கட்டுப்படுத்தப்பட்ட நாடு அல்லது வட்டாரத்துக்கு கடந்த ஏழு நாளில் பயணிகள் சென்றிருக்கக்கூடாது.

கொவிட்-19 தொற்று அதிகம் உள்ள நாடுகளை சிங்கப்பூர் கட்டுப்படுத்தப்பட்டதாக வகைப்படுத்தியுள்ளது.

தற்போது எந்த நாடும் அந்தப் பட்டியலில் இல்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!