சோதனை: 32 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) அதி­கா­ரி­கள் தீவு முழு­வ­தும் நடத்திய தேடு­தல் வேட்­டை­யில் சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் 32 போதைப்

­பொ­ருள் குற்­ற­வா­ளி­கள் பிடி­பட்­ட­னர். டெலி­கி­ராம் போன்ற கைபேசிச் செயலிகள் வாயி­லாக போதைப்­பொ­ருள் பரி­வர்த்­தனை நடப்­ப­தைப் பிடிக்க இந்­தச் சோத­னையை அதி­கா­ரி­கள் நடத்­தி­னர். ஏப்­ரல் 18, 19 ஆகிய இரு நாட்­களும் நடத்­தப்­பட்ட சோத­னை­யில் $140,000 மதிப்­புள்ள போதைப்­பொ­ருள்­கள் கைப்­பற்­றப்­பட்­டன.

அவற்­றுள் 191 கிராம் ஐஸ் போதைப்­பொ­ருள், 718 கிராம் கஞ்சா, 714 கிராம் எக்­டஸி மாத்­தி­ரை­கள் போன்­றவை அடங்­கும்.

டெலி­கி­ராம் வாயி­லாக நடை­பெற்ற போதைப்­பொ­ருள் பரி­வர்த்­த­னை­யில் ஈடு­பட்ட சந்­தே­கத்­தின் பேரில் புக்­கிட் பாத்­தோக் வெஸ்ட் வட்­டா­ரத்­தில் 26 வயது ஆட­வர் ஒரு­வரை ஏப்­ரல் 18ஆம் தேதி அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர். அந்த வட்­டா­ரத்­தில் இருந்த அவ­ரது வீட்டை சோத­னை­யிட்­ட­போது போதைப்­பொ­ருள்­கள் சிக்­கின.

அந்த வீட்­டிற்கு வந்த 24 வயது ஆட­வர் ஒரு­வ­ரும் போதைப்­பொ­ருள் குற்­றத்­திற்­கா­கக் கைது செய்­யப்­பட்­டார்.

கைபே­சிச் செயலி வாயி­லாக இதே­போன்ற போதைப்­பொ­ருள் பரி­வர்த்­த­னை­களை இலக்­கா­கக் கொண்டு கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் நடத்­தப்­பட்ட சோத­னை­யில் 50 போதைப்­பொ­ருள் குற்­ற­வா­ளி­கள் கைது செய்­யப்­பட்­ட­தாக மத்­திய போதைப்

­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வின் உள­வுப் பிரிவு துணை இயக்­கு­நர் ஸ்டேன்லி சீ தெரி­வித்­தார்.

கைபே­சிச் செயலி மூலம் நடத்­தப்­படும் சட்­ட­வி­ரோ­தப் பரி­வர்த்­த­னை­களை அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டிப்­பது கடி­னம் என குற்­ற­வா­ளி­கள் கரு­து­வது தவறு என்றார் அவர். 500 கிரா­முக்கு மேல் கஞ்சா கடத்­து­வோர் மரண தண்­ட­னையை எதிர்­நோக்­கக்­கூ­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!