ஏப்ரல் 26லிருந்து ‘டோர்ஸ்கோன்’ எச்சரிக்கைநிலை குறைகிறது

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை தொடர்ந்து குறைந்து வரு­வ­தால் 'டோர்ஸ்­கோன்' எனப்­படும் நோய்ப் பர­வலை எதிர்­கொள்­ளும் முறைக்­கான கட்­ட­மைப்பு மூலம் விடுக்­கப்­படும் எச்­ச­ரிக்­கை­நிலை இம்­மா­தம் 26ஆம் தேதி­ முதல் ஆரஞ்­சி­லி­ருந்து மஞ்­சள் நிறத்­துக்­குக் குறைக்­கப்­ப­டு­கிறது.

'டோர்ஸ்­கோன்' எச்­ச­ரிக்­கை­நிலை மஞ்­சள் நிறத்­துக்கு மாற்­றப்­ப­டு­வ­தால் ஒட்­டு­மொத்த அடிப்­

ப­டை­யில் அன்­றாட வாழ்க்கை பொது­வாக வழக்­க­நி­லைக்­குத் திரும்­ப­லாம். கொவிட்-19 பாதிப்பு அதி­க­மாக இருந்­த­போது 2020ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தில் டோர்ஸ்­கோன் எச்­ச­ரிக்­கை­நிலை ஆரஞ்சு நிறத்­துக்கு உயர்த்­தப்­பட்­டது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு நேற்று நடத்­திய மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் 'டோர்ஸ்­கோன்' எச்­ச­ரிக்­கை­நிலை மஞ்­சள் நிறத்­துக்­குக் குறைக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.

'டோர்ஸ்­கோன்' எச்­ச­ரிக்­கை­நிலை பச்­சை­யாக இருந்­தால் மிகச் சிறிய பிரச்­சி­னை­கள் மட்­டும் இருக்­கிறது என்று அர்த்­தம்.

எச்­சரிக்­கை­நிலை மஞ்­ச­ளாக இருந்­தால் இலே­சான கிரு­மித்­தொற்று அல்­லது பாதிப்பு கடு­மை­யாக இருந்­தா­லும் கிரு­மிப் பர­வல் அபா­யம் இல்லை என்று பொருள்­கொள்ள வேண்­டும். இந்த நிலை­யில், பொது­மக்­கள் கவ­ன­மாக இருக்க வேண்­டும்.

எச்­ச­ரிக்­கை­நிலை ஆரஞ்சு நிற­மாக இருந்­தால் நோய் கடு­மை­யாக இருப்­ப­து­டன் கிரு­மிப் பர­வல் அபா­யம் இருப்­ப­தா­க­வும் அர்த்­தம்.

இருப்­பி­னும், கிரு­மிப் பர­வல் கட்­டுக்­குள் இருப்­ப­தா­க­வும் பொதுச் சுகா­தா­ரத்­துக்கு மித­மான அல்­லது கடு­மை­யான பாதிப்பு இருப்­பதை இந்த எச்­ச­ரிக்­கை­நிலை காட்­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் 'டோர்ஸ்­கோன்' எச்­ச­ரிக்­கை­நிலை மிக மோச­மான நிலை­யான சிவப்பு நிறத்தை எட்­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

"பொது­மக்­க­ளுக்கு இது தெரி­யா­மல் இருக்­கக்­கூ­டும். ஆனால் நிலை­மைக்கு ஏற்ப தயார்­நி­லை­யில் இருக்க சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் உட்­பட மற்ற அர­சாங்க அமைப்­பு­க­ளுக்­கும் 'டோர்ஸ்­கோன்' எச்­ச­ரிக்கைநிலை

பேரு­த­வி­யாக இருக்­கிறது.

"எச்­ச­ரிக்­கை­நிலை உயர்த்­தப்­

ப­டும்­போது அதற்கு ஏற்­றாற்­போல சில நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும். உதா­ர­ணத்­துக்கு, கொவிட்-19 பாதிப்பு அதி­க­ரித்­தால் கூடு­தல் நோயா­ளி­க­ளுக்­குத் தேவை­யான படுக்­கை­களைத் தயார் செய்ய வேண்­டும்," என்று

வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!