கொவிட்-19 தொற்று கற்றுத் தந்த பாடங்களுடன் பயணிப்போம்

முரசொலி

உலகம், குறிப்பிடத்­தக்க அள­வுக்­குப் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­திய பொரு­ளி­யல் நெருக்­க­டி­கள், நிதித் துறை பிரச்­­சி­னை­கள், இயற்­கைப் பேரி­டர்­கள் போன்ற­வற்றை பல முறை பார்த்து அவற்றை ஒற்று­மை­யாக சமா­ளித்து மீண்டு வந்­துள்­ளது.

ஆனால் இனிமேல் முற்­றி­லும் மீண்டு வரவே முடி­யாதா என்ற ஓர் ஐயத்தை கிளப்­பி­வி­டும் அளவுக்கு ஒரு மிரட்­டலை கொவிட்-19 ரூபத்­தில் உல­கம் முதன் முத­லாக சந்­தித்தது இப்­போ­து­தான். கொரோனா இன்­ன­மும் முழு­மை­யாக அகலவில்லை.

கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த இரண்டாண்டு காலத்­தில் அனைத்­து­லக சமூ­கம் எதிர்­நோக்­கிய முன்­பின் கண்­ட­றி­யாத ஒரு சூழல் உல­கிற்­கும் நமக்­கும் பல பாடங்­களைக் கற்றுத் தந்து இருக்­கிறது.

திடீர் திடீ­ரென கிரு­மித்­தொற்­று­ தலை­தூக்­கலாம். அப்­ப­டிப்­பட்ட ஒரு நேரத்­தில் அதைத் திறம்­பட சமாளிக்கும் வழிமுறையை எப்போதும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை முன்பை­விட இப்­போது உல­கம் நன்கு கற்­றுக்­கொண்டு இருக்­கிறது. நாமும் கற்­றுக்­கொண்டு இருக்­கி­றோம்.

கொரோனா தொற்று கார­ண­மாக பல மாற்­றங்­களை நாம் பின்­பற்ற வேண்­டிய தேவை ஏற்­பட்­டது.

அந்தக் கிருமியை அறவே ஒழிக்க முடி­யாது. அதோடு சேர்ந்­து­தான் வாழ வேண்­டும் என்ற கட்டாயத்திற்கு, மனப்­பக்­கு­வத்­திற்கு நாம் வந்­துள் ளோம். அந்த மாற்­றங்­கள் மூலம் கற்­றுக்­கொண்ட பாடங்­களைக் கடைசி வரை மறக்­கா­மல் மற்­றொரு தொற்­றுக்கு ஆளா­காத வகை­யில் அவற்றை ஓர் அர­ணாக நாம் பயன்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டும்.

எந்­த­வொரு மிரட்­ட­ல் ஏற்­படும்போதும் ஒரு சமூ­கத்­துக்கு மீள்­தி­றன் எந்த அள­வுக்கு முக்­கி­யம், எவற்றைச் செய்­தால் உயிர்­பித்து இருக்க முடி­யும் என்­பதை எல்­லாம் கடந்த ஈராண்­டு­களில் நாம் கற்­றுக்­கொண்டு இருக்­கி­றோம்.

இன்­ன­தென்று தெரி­யாத, அதி­வே­க­மா­கப் பரவக்­கூ­டிய, மிகக் கொடூ­ர­மான, திடீர் திடீ­ரென உரு­மா­றக்­கூ­டிய, கண்­ணுக்­குத் தெரி­யாத கிரு­மி­கள் எப்­போது, எப்­படி வேண்­டு­மா­னா­லும் தலை­யெ­டுக்­கக்­கூ­டும் என்ற ஒரு எச்­ச­ரிக்­கையை கொவிட்-19 நமக்கு மறக்க முடி­யாத அள­வுக்­குப் போதித்து இருக்­கிறது.

கொரோனா உல­கில் உள்ள ஒவ்­வொரு சமூ­கத்­தை­யும் ஒன்­றில் இரண்டு பார்த்­து­விட்­டது. பட்டதே போதும் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது. எதிர்­கா­லத்­தில் தோன்­றக்­கூ­டிய தொற்று இதை­விட மோச­மாக இருக்­கக்­கூ­டும் என்ற ஒரு பயத்­தை­யும் கொரோனா கிளப்­பி­விட்டு உள்­ளது.

வருங்­கா­லத்­தில் தொற்று ஏதே­னும் ஏற்­பட்­டால் நிலைமை எப்­படி ஆகும் என்­பது இப்போது ஓரளவுக்கு நமக்­குப் புரி­யும். ஒரே நேரத்­தில் சமூ­கத்­தில் ஏரா­ள­மா­ன­வர்­கள் பாதிக்­கப்­படுவார்­கள் என்­ப­தால் அதை எப்­படி தவிர்த்­துக்­கொள்ள முடி­யும், எப்­படி சமாளிக்க முடி­யும் என்­பதை முன்­பை­விட இப்­போது ஓரளவுக்குத் தெளி­வாகத் தெரிந்து வைத்­தி­ருக்­கி­றோம்.

அத்தகைய ஒரு நிலை வரும்போது பார்த்­துக்­கொள்­ள­லாம் என்ற ஓர் அணு­கு­முறை இனி பலன் தராது. ஆகை­யால், இப்­போதே நாம் அதற்­குத் தயா­ராக வேண்­டும் என்பதுதான் கொரோனா நமக்குக் கற்றுக்கொடுத்த மிக முக்கிய பாடம்.

அண்­மை­யில் பிர­த­மர் லீ சியன் லூங் இதைத்­தான் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை விரி­வுரை ஆற்­றிய பிர­த­மர், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­பில் முத­லீடு செய்­வ­தைப் போலவே பொது­மக்­க­ளின் சுகா­தாரத்திலும் முத­லீடு செய்ய வேண்­டிய தேவை ஏற்­படும் என்­பதை விளக்­கி­னார்.

ஒவ்­வொரு நோயா­ளிக்­கும் தலை­சி­றந்த சிகிச்சையை, கட்­டுப்­ப­டி­யா­கக்­கூ­டிய வகை­யில் வழங்­கு­வ­தில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நடைமுறை ஒரு­மித்த கவனம் செலுத்­து­கிறது. பொது­மக்­கள் சுகா­தா­ரம் என்­பது மொத்த மக்­க­ளின் உடல்­நலனைக் கட்­டிக்­காப்­ப­தில் கவ­னம் செலுத்­து­கிறது.

ஒரு கிருமி பரந்த அள­வில் சமூ­கத்­தில் தொற்­றும்­போது உடல்­ந­ல­மிக்க மக்­களும் நோயா­ளி­யாகக்­கூ­டிய வாய்ப்பு அதி­கம் என்­பதை கொவிட்-19 மெய்ப்பித்துள்ளது. இதை தவிர்த்­துக்­கொள்­ளும் வகை­யில் பொதுச் சுகா­தார அடிப்­படை வச­தி­கள் தொடர்ந்து மேம்­பட வேண்­டும்.

நல்ல மருத்­துவ வச­தி­கள், உள்­கட்­டமைப்பு வசதி­கள், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­களுக்கு ஆத­ரவு தரும் ஏற்­பா­டு­கள், அறி­வி­யல், உயி­ரி­யல் மருத்­துவ ஆற்­றல் மேம்­பாடு, ஆய்­வு­களில் உ­லக ஒத்­து­ழைப்பு ஆகிய அனைத்­தும் தொடர வேண்­டும்.

இப்­படி நடந்­தால்­தான் எதிர்­கா­லத்­தில் எதிர்­பாராத வித­மாக கொடூ­ர­மான தொற்­று­கள் தலை­யெ­டுக்­கும்­போது அதன் பாதிப்­பு­க­ளைத் தவிர்த்­துக்­கொண்டு கிரு­மியைச் சுத்­த­மாக துடைத்­தொழிக்­கக்கூடிய நல்ல நிலை­மை­யில் நாம் இருக்க முடி­யும்.

கொவிட்-19 தொற்று மொத்­த­மாக சமூ­கத்­திற்கு மட்­டு­மின்றி ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் பல பாடங்­களை கற்று தந்து இருக்­கிறது.

அன்­றாட வாழ்க்­கை­யில் உடல்­ந­லத்­திற்கு, சுகாதாரத்­திற்கு உகந்த பழக்­க­வ­ழக்­கங்­களை ஆயுட்­கா­லம் வரை பின்­பற்ற வேண்­டிய அவ­சி­யத்தை அது உணர்த்தி இருக்­கிறது.

மக்­கள்­தொகை மூப்­ப­டைந்து வரும் நிலை­யில், தர­மான வாழ்­வுக்கு அந்­தப் பழக்­க­வ­ழக்­கங்­கள் பெரி­தும் முக்­கியமானவை.

ஒரு­வர் நோய்­வாய்­படும்போது மட்­டும் சிகிச்சையை நாடா­மல் உடல் நலனுடன் இருக்கும்போதே காலக்­கி­ரம முறைப்­படி மருத்­து­வரைச் சந்­தித்து தன்­னுடைய உடல்­ந­லத்தை ஒவ்வொருவரும் உறு­திப்­ப­டுத்திக் கொண்டு வர­வேண்­டிய ஓர் அணுகு­முறை நோய்­களை­யும் பாதிப்பு­க­ளை­யும் அவை ஏற்­படும் முன்­பா­கவே தவிர்த்­து­விட உத­வும்.

இத­னால் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் மொத்தத்தில் சமூகத்திற்கும் பலன் ஏற்­படும். அதோடு மட்­டு­மின்றி, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­பிற்கு நாடு செல­விட வேண்­டிய தொகை கணி­ச­மாக மிச்­ச­மா­கும். அதை அடிப்­படை வச­தி­களை மேம்­ப­டுத்­தப் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்.

ஒட்­டு­மொத்த சமூ­கத்­தின் நலன் என்­பது ஒவ்­வொ­ரு­வ­ரின் நல­னைப் பொறுத்தே இருக்­கும் என்­பது தெரிந்­த­து­தான் என்­றா­லும் கொரோனா தொற்று இதனை திட்­ட­வட்­ட­மாக வலி­யு­றுத்தி இருக்­கிறது.

ஆகை­யால், கொரோனா கற்றுத் தந்த பாடங்­களை, நாம் கற்­றுக்­கொண்­ட­வற்றை காலா­கா­லத்­திற்­கும் மன­தில் நிறுத்தி ஒவ்­வொ­ரு­வரும் தொடர்ந்து செயல்­பட வேண்­டும்.

வரு­முன் காக்க நாம் ஆயத்­த­மாக வேண்டும். மிரட்­டல், ஆபத்து தலை­தூக்­கி­னா­ல் அதைச் சமா­ளித்து மீண்டு வர உத­வும் மீள்­தி­றனை தொடர்ந்து பலப்­ப­டுத்தி வர­வேண்­டும். கொவிட்-19 கிரு­மி­யு­டன் தொடர்ந்து வாழ வேண்­டிய நாம், அதற்கு முற்றிலும் ஆயத்­த­மா­க வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!