‘பென்ட்லீ’ ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

ரெட் சுவாஸ்­டிக்கா பள்­ளிக்கு வெளியே பாது­கா­வல் அதி­கா­ரி­யின் உயி­ருக்கு ஆபத்து விளை­வித்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் 'பென்ட்லீ' வாகன ஓட்­டு­நர் மீது கவ­ன­மற்ற செய­லின் மூலம் காயம் ஏற்­ப­டுத்­தி­ய­தாக ஒரு குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது. தகுந்த காப்­பு­று­தி­யின்றி வாக­னத்தை ஓட்­டி­ய­தா­க­வும் 61 வயது நியோ ஹொங் சை சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றார்.

அச்­சம்­ப­வம் கடந்த ஜன­வரி மாதம் நிகழ்ந்­தது.

கணக்­கி­யல், நிறு­வ­னக் கட்­டுப்­பாட்டு ஆணை­யத்­தின் இணை­யத்­த­ளத்­தில் தேடி­ய­போது நியோ ஹொங் சை 'ஜியா சியூ கொன்ட்­ரேக்­டர்ஸ்' கட்­டு­மான நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ளர் எனத் தெரி­ய­வந்­தது. இவர் வேறு இரண்டு நிறு­வ­னங்­க­ளின் இயக்­கு­ந­ரா­க­வும் பதவி வகிக்­கி­றார்.

சம்­ப­வம் நிகழ்ந்­த­போது இவ­ரின் மகன்­தான் 'பென்ட்லீ' வாக­னத்­தின் உரி­மை­யா­ள­ராக இருந்­தார் என்று காவல்­து­றை­யும் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­ய­மும் இணைந்து வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது. 'பென்ட்லீ' வாக­னத்­தின் அடை­யாள எண் பட்­டையை மாற்றி அதை காப்­பு­றுதி இல்­லா­மல் தனது தந்­தையை ஓட்ட அனு­ம­தித்­த­தாக 28 வயது கிலின் நியோ ஜியா மீது ஒரு குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. பயன்­ப­டுத்­தப்­பட்ட வாக­னங்­களை விற்­கும் இரண்டு நிறு­வ­னங்­களில் கிலின் இயக்­கு­ந­ரா­கப் பதவி வகிப்­ப­தா­கக் கணக்­கி­யல், நிறு­வ­னக் கட்­டுப்­பாட்டு ஆணை­யத்­தின் இணை­யத்­த­ளத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஜன­வரி மாதம் 11ஆம் தேதி­யன்று சம்­பந்­தப்­பட்ட 'பென்ட்லீ' வாக­னத்­தின் இரு புறங்­களில் உள்ள அடை­யாள எண் பட்­டை­களில் கிலின் மாற்­றங்­க­ளைச் செய்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது என்று நீதி­மன்ற ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மேலும், அன்று காலை ஆறரை மணி­ய­ள­வில் அவர் காப்­பு­றுதி வைத்­தி­ராத தனது தந்­தை­யி­டம் வாக­னத்தை ஓட்­டக் கொடுத்­த­தா­க­வும் சொல்­லப்­ப­டு­கிறது.

அதற்கு சுமார் ஒரு மணி நேரத்­திற்­குப் பிறகு நியோ ஹொங் சை, ரெட் சுவாஸ்­டிக்கா பள்­ளிக்கு வெளியே கவ­ன­மற்ற செயலை மேற்­கொண்டு பாது­கா­வல் அதி­காரி நியோ ஆ வாட்­டுக்­குக் காயம் ஏற்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அச்­சம்­ப­வம் பதி­வான காணொ­ளியை இணை­யத்­தில் பலர் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

கவ­ன­மற்ற செய­லின் மூலம் காயம் ஏற்­ப­டுத்­திய குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் குற்­ற­வா­ளிக்கு அதி­க­பட்­ச­மாக ஓராண்­டுச் சிறைத் தண்­ட­னை­யும் 5,000 வெள்ளி அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம். காப்­பு­றுதி இல்­லா­மல் வாக­னத்தை ஓட்­டிய குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் குற்­ற­வா­ளிக்கு அதி­க­பட்­ச­மாக மூன்று மாதச் சிறைத் தண்­ட­னை­யும் 1,000 வெள்ளி அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம். அனைத்து ரக வாக­னங்­களை ஓட்ட தடை­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!