விற்றுத் தீர்ந்த கோழிகள்

ஈரச்சந்தைகளிலும் பேரங்காடிகளிலும் குவிந்த கூட்டம்

பல ஈரச்­சந்­தை­க­ளி­லும் பேரங்­கா­டி­க­ளி­லும் நேற்­றுக் காலை புதிய கோழி­கள் மள­ம­ள­வென விற்­றுத் தீர்ந்­தன.

வரும் ஜூன் 1ஆம் தேதி­யில் இருந்து ஒரு மாதத்­திற்கு 3.6 மில்­லி­யன் கோழி­கள் வரை­யி­லான ஏற்­று­ம­திக்­குத் தடை விதிப்­ப­தாக மலே­சியா அறி­வித்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து, சிங்­கப்­பூ­ரில் கோழி இறைச்­சிக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது.

பிடோக், கிம் மோ, பீஷான், மெக்­பர்­சன் ஆகிய வட்­டா­ரங்­களில் உள்ள ஈரச்­சந்­தை­களில் காலை 8 மணி­யி­லி­ருந்து 9.30 மணிக்­குள்­ளா­கவே கோழி­கள் அனைத்­தும் விற்­றுத்­தீர்ந்­த­தாக கோழிக் கடைக்­கா­ரர்­கள் கூறி­னர். இது வழக்­கத்­தை­விட மூன்று, நான்கு மணி நேரம் குறைவு.

"இன்று வேலை­யில் மிக­வும் பர­ப­ரப்­பாக இருந்­தேன். ஒரு மடக்­குத் தண்­ணீர்­கூட குடிக்­க­வில்லை," என்­றார் 216, பிடோக் நார்த் ஈரச் சந்­தை­யில் செயல்­படும் சாப் எங் ஹுவாட் கோழி இறைச்­சிக் கடை­யின் உரி­மை­யா­ளர் டான் மெய் இன், 50.

வாடிக்­கை­யா­ளர்­கள் இரண்டு முதல் நான்கு கோழி­களை வாங்­கிச் சென்­ற­தாக திரு­வாட்டி டான் சொன்­னார்.

வாடிக்­கை­யா­ளர் ஒரு­வர் கிட்­டத்­தட்ட 300 வெள்­ளிக்­குக் கோழி இறைச்­சியை வாங்­கிச் சென்­ற­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இருப்­பி­னும், ஒரு­வ­ருக்கு இத்­தனை கோழி­கள்­தான் வாங்­க­லாம் எனக் கட்­டுப்­பாடு விதிக்­கும் திட்­ட­மில்லை என்று கடைக்­கா­ரர்­கள் பல­ரும் சொன்­ன­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறி­யது.

இதே­போல, பல பேரங்­கா­டி­களி­லும் நேற்­றுக் காலை­யில் புதிய கோழி­கள் விறு­வி­று­வென விற்­றுத் தீர்ந்­தன.

பிடோக் வட்­டா­ரத்­தில் உள்ள ஷெங் சியோங், ஃபேர்பி­ரைஸ், ஜயன்ட் பேரங்­கா­டி­களில் காலை 9 மணிக்கு முன்­பா­கவே புதிய கோழி­கள் விற்­கப்­பட்­டு­விட்­டன. உறைய வைக்­கப்­பட்ட கோழி இறைச்சி மட்­டுமே அங்கு இருந்­ததைக் காண முடிந்­தது.

வரும் வாரங்­களில் உறைய வைக்­கப்­பட்ட கோழி இறைச்­சி­யின் விலை­யும் உய­ர­லாம் என வாடிக்­கை­யா­ளர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.

கிடைக்­கா­மல் போய்­வி­டுமோ என அச்­சப்­பட்டு, தாம் கோழி­களை வாங்­கிக் குவிக்­கப்­போ­வ­தில்லை என்­றார் திரு லிம் ஹோங் யி, 70.

"புதி­தாக வேண்­டும் என்­ப­தால்­தான் ஈரச்­சந்­தைக்கு வந்து கோழி வாங்­கு­கி­றோம். அப்­படி இருக்க, கோழி­களை வாங்கி குளிர்­ப­த­னப் பெட்­டி­யின் உறை­க­ல­னில் அடுக்­கு­வ­தால் என்ன பயன்?," என்று கேட்­டார் ஓய்­வு­பெற்ற கடை நிர்­வா­கி­யான திரு லிம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!