கொவிட்-19: மீண்டு வந்தாலும் மீண்டும் வந்தாலும் சமாளிப்போம்

முரசொலி

கொவிட்-19 தொற்று ஓர­ள­வுக்கு ஒடுங்­கி­யதை அடுத்து உல­கின் பல பகு­தி­களும் கொஞ்சம் கொஞ்ச­மாக, நிதானமான அவ­ச­ரத்­து­டன் பழைய நிலைக்­குத் திரும்பி வருகின்­றன. கொவிட்-19 உலகைவிட்டு இன்­ன­மும் ஒழி­ய­வில்லை என்­றா­லும்­கூட அந்தக் கிரு­மி முன்­பை­விட இப்­போது வீரி­யம் குறைந்து இருப்­ப­தா­கவே தெரி­கிறது.

இருந்­தா­லும்­கூட உல­கம் முழு­வ­தும் ஒரே மாதிரி­யான நிலை இன்­ன­மும் இல்லை. ஓரி­டத்­தில் தொற்று அதி­க­மா­க­வும் ஓர் இடத்­தில் குறை­வா­க­வும் காணப்­படு­கிறது. பல நாடு­களும் தங்­கள் சூழ்­நி­லைக்கு ஏற்ப பல்­வேறு கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி இருக்­கின்­றன, தளர்த்தி வரு­கின்­றன.

இரண்டாண்டு கால­மாக பெரும்­பா­லும் வீட்டி­லேயே முடங்கி கிடந்த உலக மக்­கள் வெளியே கிளம்பி உல­கின் பல பகு­தி­க­ளுக்­கும் பய­ணம் மேற்­கொள்ளத் தொடங்கி இருக்­கி­றார்­கள்.

சிங்கப்­பூ­ரர்­களும் இதற்கு விதி­வி­லக்கு அல்ல. உல­கப் பய­ணி­கள் இங்கு அதி­க­மாக வந்துசெல்ல தொடங்­கி­விட்­ட­னர்.

வீட்­டில் இருந்­த­ப­டியே வேலை­யும் பார்த்து வந்த ஊழியர்­கள் மீண்­டும் அலு­வ­ல­கம் திரும்­பு­கி­றார்­கள். பள்­ளிப் பிள்­ளை­கள் மீண்­டும் புத்­தக மூட்­டையைச் சுமக்க தொடங்குகிறார்­கள். பல துறை­களும் மெல்ல மெல்ல தலை நிமிர்­கின்­றன. பொருளி­யல் சூடு­பி­டிக்­கத் தொடங்கி இருக்­கிறது.

தொற்று காலத்­தில் உயி­ரை­யும் பணயம் வைத்து ஓய்வு இல்­லா­மல் 24 மணி­நே­ர­மும் வாரம் ஏழு நாள்களும் பாடு­பட்­டு­வந்த முன்­க­ளப் பணி­யா­ளர்கள் இப்­போது கொஞ்­சும் பெரு­மூச்சு விடு­கி­றார்­கள்.

இத்­த­கைய ஒரு நேரத்­தில்­தான் மறு­ப­டி­யும் பயத்தைக் கிளப்­பும் வகை­யில் ஓர் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. சிங்­கப்­பூ­ரில் வரும் மாதங்­களில்- அதா­வது ஜூலை, ஆகஸ்­டில் கொவிட்-19 தொற்று அலை ஏற்­படும் வாய்ப்பு இருப்­ப­தாக அதி­கா­ரி­கள் அபாயச் சங்கு ஊதி இருக்கிறார்கள்.

பள்­ளிக்­கூட விடு­மு­றை­யைப் பயன்­ப­டுத்­திக் கொண்டு இந்த மாதம் சிங்­கப்­பூ­ரர்கள் பல நாடுகளுக்­கும் செல்லும் வாய்ப்பு உண்டு. அவர்­கள் கிரு­மி­ தொற்றுடன் திரும்பக்கூ­டிய வாய்ப்­பும் இருக்­கிறது என்­பதை அதிகாரிகள் சுட்­டிக்­காட்டி உள்ளனர்.

ஒரு நாடு எந்த அள­வுக்­குப் பாது­காப்­பாக இருந்­தா­லும் அதை எல்­லாம் மீறி கொரோனா வேலையைக் காட்­டும் என்­ப­தைக் கடந்த இரண்டு ஆண்டு காலத்­தில் நாம் கண்டுகொண்டு இருக்கிறோம். இப்போது­சீனா படும்பாடு இதற்கு ஓர் எடுத்­துக்­காட்டு.

கொவிட்-19 கிருமி திடீர் திடீர் என்று உரு­மாறக்­கூ­டி­யது. அதை ஒடுக்க இப்­போ­துள்ள ஒரே ஆயு­தம் தடுப்­பூ­சி­தான். ஆனா­லும் அதற்கு எதிரான தடுப்­பூசி ஒரு குறிப்­பிட்ட காலம்­வ­ரை­தான் நோய்த் தடுப்பு ஆற்­றலை ஏற்­ப­டுத்­தித்­ தரு­கிறது.

அல்­லது தடுப்­பூசி மருந்து செயல்­பட முடி­யாத அள­வுக்குக் கிருமி புதிய வடி­வில் உரு­மாற வாய்ப்பு உண்டு. அடுத்த தொற்று அலை ஏற்­படும் பட்­சத்­தில் அதற்கு இது­வும் ஒரு கார­ண­மா­க­லாம் என்று வல்­லு­நர்­கள் தெரி­விக்கிறார்கள். சிங்­கப்­பூ­ரில் புதிய அலைக்­குப் பதி­லாக இலே­சான பாதிப்­பு­களை ஏற்­படுத்­தும் அள­வுக்குப் பல­ர் தொடர்ந்து பாதிக்­கப்­படக்­கூ­டிய சூழ­லும் வர­லாம்.

எப்­ப­டிப்­பட்ட சூழ்­நிலை தலை­தூக்­கி­னா­லும் ஓமிக்­ரான் தொற்று தலை­விரித்து ஆடியபோது நாம் அனு­ப­வித்த நெருக்­கடி மறு­ப­டி­யும் ஏற்­பட ஒரு­போ­தும் நாம் இடம் கொடுத்து விடக்­கூ­டாது என்­ப­து­தான் மிக முக்­கி­ய­மான ஒன்று.

ஓமிக்­ரான் தாண்டவ காலத்தில் தாதிமை விடுதி­கள், சமூக மருத்­து­வ­ம­னை­கள், தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் உள்­ளிட்ட பல்­வேறு அமைப்புகளும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்­தன.

அவற்­றால் இய­லா­மல் போனதை அடுத்து பலரை­யும் பொது மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்க வேண்டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது. பொது­ ம­ருத்­து­வ­ம­னை­களின் ஒரு­மித்த கவ­னம் ஓமிக்­ரான் நோயா­ளி­கள் மீது திரும்­பி­ய­தால் அந்த மருத்­து­வ­மனை­கள் தங்­களுடைய வழக்­க­மான நோயா­ளி­க­ளைக் கவனிக்க இய­ல­வில்லை. இது வேறு சுகா­தா­ரப் பிரச்­சி­னைக்கு இடம் கொடுத்­து­விட்­டது.

சிங்­கப்­பூ­ரில் வரும் மாதங்­களில் கொவிட்-19 தொற்று எப்­படி எந்த அள­வுக்கு இருந்­தா­லும் இத்­தகைய ஒரு நிலை மீண்­டும் ஏற்­பட நாம் அனு­மதித்­து­வி­டக்­கூ­டாது.

இதைச் சாதிக்க வேண்­டு­மா­னால் சுகா­தார பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள்-அதா­வது தாதிமை விடுதி­கள் முதல் சமூக மருத்­து­வ­ம­னை­கள் வரை-ஒவ்­வொன்­றும் தொற்­றைச் சமா­ளிக்க எப்­போ­துமே ஆயத்த நிலை­யில் இருக்­க­வேண்­டும் என்­பது கட்­டா­ய­மா­னது. சுகா­தார பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­கள் உள்­ளிட்டோரும் அனைத்து வச­தி­களும் முழு விழிப்பு நிலை­யில் இருந்­து­வ­ர­வேண்­டும்.

பல நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் சிங்­கப்­பூர் கொவிட்-19க்கு எதி­ரான போரா­ட்டத்­தில் குறிப்­பிடத்­தக்க வெற்­றி­யைப் பெற்­றுள்ள நாடு. அடுத்­த­அலை எந்த வடி­வில் எப்­படி வந்­தா­லும் தொற்­றைச் சமா­ளிக்க சிங்­கப்­பூர் முன்­பை­விட இப்­போது வெகு சிறப்­பான நிலை­யில் இருக்­கிறது.

ஆகை­யால் மக்­கள் அள­வு­க்கு அதி­க­மாக கவ­லைப்­பட தேவை­யில்லை. அவர்­கள் தங்­கள் பயணத் திட்­டங்­க­ளைக் கைவிட வேண்­டிய அவசி­யமும் இல்லை.

கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு வந்­தி­ருப்­ப­தால் கொவிட்-19க்கு முன்பு இருந்த பொரு­ளி­யல், சமூக இயல்­பு­நிலை திரும்­புகிறது. இதை சிங்­கப்­பூ­ரர்­கள் அனு­ப­விக்­கத்­தான் வேண்­டும். அதே வேளையில் தங்களுக்கும் சில பொறுப்புகளும் கடமைகளும் உண்டு என்பதை அவர்கள் மறக்கலாகாது.

சிங்கப்பூரர்கள் உலக நிலவரங்களையும் உள்ளூர் சுகாதாரச் சூழல்களையும் பற்றி, அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரிந்துகொண்டு எப்போதுமே விழிப்புடன் இருந்துவர வேண்டும்.

வரும் மாதங்களில் தொற்று அதிகமாகி அதனால் வாழ்க்கை பாணியை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை வந்தால், அதற்கும் சிங்கப்பூரர்கள் மனதள விலும் செயல் அளவிலும் தயாராக இருக்க வேண் டும். இதை எப்போதுமே அவர்கள் மனதில் நிலை நிறுத்தி வைத்திருக்க வேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது தங்களையும் தங்கள் சிங்கப்பூரையும் மனதில் நிறுத்தி முன்னெச்சரிக்கையுடன் கெட்டிக் காரத்தனமாக நடந்துகொள்ள வேண்டும்.

ஓமிக்ரான் தொற்று மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை மறக்காமல் பொறுப்புடன் நடந்துகொண்டு நாமும் நம் அடிப்படை அமைப்புகளும் ஆயத்த நிலையில் விழிப்பு நிலையில் தொடர்ந்து இருந்து வந்தால் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இருந்து மீண்டு வந்தாலும் அது மீண்டும் வந்தாலும் அதை வெற்றிகரமான முறையில் வீழ்த்தி சிங்கப் பூரர்கள் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்ல முடியும் என்பது திண்ணம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!