மோசடி தொடர்பில் 277 பேர்மீது விசாரணை; மொத்தம் $5.8 மில்லியன் இழப்பு

மோச­டிச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் சந்­தே­கத்­தின் பேரில் மொத்­தம் 277 பேர் விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக சிங்­கப்­பூர் காவல் துறையினர் நேற்று தெரி­வித்­த­னர். 767க்கும் மேற்­பட்ட மோச­டிச் சம்­ப­வங்­களில் இவர்­கள் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­க­லாம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

வங்கி தொடர்­பான மோச­டி­கள், இணை­ய­வழி காதல் தொடர்­பான மோச­டி­கள், வர்த்­தக மின்­னஞ்­சல் தொடர்­பான ஆள்­மா­றாட்ட மோச­டி­கள், அர­சாங்க அதி­காரி போல் பாசாங்கு செய்த மோச­டி­கள், இணைய வர்த்­தக மோச­டி­கள், முத­லீட்டு மோச­டி­கள், வேலை மோச­டி­கள், கடன் தரு­வது தொடர்­பான மோச­டி­கள் போன்ற பல­த­ரப்­பட்ட சம்­ப­வங்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் இழந்த தொகை $5.8 மில்­லியன் என்று கூறப்­ப­டு­கிறது.

சந்­தேக நபர்­க­ளின் வயது 16க்கும் 78க்கும் இடைப்­பட்­டது என்­றும் அவர்­கள் மோச­டிக்­கா­ரர்­கள் அல்­லது வேறொ­ரு­வர் சார்­பில் பணத்­தைக் கள்­ளத்­த­ன­மாக அப­க­ரித்­த­வர்­கள் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கி நேற்று முன்­தி­னம் வரை வர்த்­த­கக் குற்ற விசா­ர­ணைப் பிரிவு அதி­கா­ரி­களும் காவல் துறை­யின் ஏழு நிலப் பிரி­வு­க­ளின் அதி­கா­ரி­களும் இணைந்து நடத்­திய அம­லாக்­கச் சோத­னை­யில் சந்­தேக நபர்­கள் சிக்­கி­னர்.

சந்­தேக நபர்­களில் 197 பேர் ஆண்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. ஏமாற்­று­தல், பண மோசடி, உரி­ம­மின்றி கட்­ட­ணச் சேவை­ வழங்கு­தல் போன்­ற­வற்­றின் தொடர்­பில் இவர்­கள் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

பொது­மக்­கள் தங்­க­ளின் வங்­கிக் கணக்­கையோ கைபேசி தொடர்பு எண்­ணையோ வேறொ­ரு­வர் பயன்­ப­டுத்­திக்­கொள்ள அனு­மதிக்­கு­மாறு கோரி­னால் அதற்கு இடங்­கொ­டுக்க வேண்­டாம் என்­றும் குற்­றச்­செ­யல் நிகழ்ந்­தால் பொது­மக்­களும் அதற்கு உடந்­தை­யா­கக் கரு­தப்­ப­டு­வர் என்­றும் அதி­கா­ரி­கள் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் எச்­ச­ரிக்கை

இதற்­கி­டையே, சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­தின் அதி­கா­ரி­க­ளாக பாசாங்கு செய்­யும் மோச­டிக்­கா­ரர்­கள் தொடர்­பில் ஆணை­யம் பொது­மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

மோச­டிக்­கா­ரர்­கள் மின்­னஞ்­சல் மற்­றும் தொடர்பு எண் வழி­யாக வரி செலுத்­து­ப­வ­ரின் வங்­கிக்­கணக்கு விவ­ரங்­கள், 'ஓடிபி' போன்ற தனி­ந­பர் தக­வல்­க­ளைக் கோரி வரு­வ­தாக அவர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!