விலைவாசி: அரசு ஆதரவும் மக்கள், நிறுவனங்களின் பொறுப்பும்

முரசொலி

உல­க­ள­ாவிய பல பிரச்­சி­னை­க­ளால் பண­வீக்­கம், அதா­வது விலை­வாசி, தாறு­மா­றாக அதி­க­ரித்­து­விட்டது. சிங்­கப்­பூ­ரைப் பொறுத்­த­வரை கடந்த மே மாத நில­வ­ரப்­படி பல ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு விலை­வாசி 5.6% அதி­க­ரித்­துள்­ளது. $100 செல­விட்ட மக்­கள், இப்­போது அதே பொருள், சேவை­யைப்­பெற $105.60 செல­விட வேண்­டிய நிலை.

பண­வீக்­கம் விரை­வில் இறங்­குமு­கமாகத் திரும்­பும் என்­ப­தற்­கான உட­னடி அறி­கு­றி­யும் தெரிந்­த­பா­டில்லை. இது ஒரு­பு­றம் இருக்க, உலகப் பொருளி­யல் நில­வ­ரங்­கள் நிச்­ச­ய­மில்­லாத நிலை­யிலே தொடர்­கின்­றன. 2023ல் பொரு­ளி­யல் மந்­தத்­துக்­கும் வாய்ப்பு உள்ளதாக அபா­யச் சங்கு ஊதப்­ப­டு­கிறது.

விலை­வாசி கூடும் சூழ­லில் சிங்­கப்­பூ­ரில் எதிர்­கால அர­சாங்­கச் செல­வி­னங்­கள் மேலும் அதி­கரிக்­கும் வாய்ப்­பும் உள்­ளது. அர­சாங்­கத்­துக்கு அதிக பணம் தேவைப்­படக்­கூ­டிய நிலை இருக்­கிறது. வருங்­கால செல­வினங்­க­ளைச் சமா­ளிக்­கும் ஏற்­பா­டாக ஜிஎஸ்டி எனப்­படும் பொருள், சேவை வரியை உயர்த்த திட்டம் உள்­ளது.

அதே­வே­ளை­யில், விலை­வாசி உயர்­வ­தால் மக்­களுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய சிர­மங்­க­ளைக் குறைக்க வேண்­டும். இதைக் கருத்­தில்கொண்டே நன்கு செம்­மை­யாக அளந்து பார்த்து எல்­லா­வற்­றை­யும் எடை­போட்டு சூழ்­நி­லைக்கு ஏற்ற புதிய 1.5% பில்­லி­யன் நிவா­ர­ணத் திட்­டம் அறிவிக்­கப்­பட்டுள்­ளது.

குடும்­ப­மாக இரு­ந்தா­லும் நிறு­வ­னங்­க­ளாக இருந்தா­லும் யார் யாருக்கு எந்த அள­வுக்கு உதவி தேவைப்­படும் என்­பதை மிகக் கவ­ன­மாக மதிப்பிட்டு துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங்கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அந்த நிவாரண திட்டத்தை அறி­வித்­தார். அத்திட்­டம் ஏற்­கெ­னவே நடப்­பில் உள்ள பல நிவா­ரண உத­வி­க­ளுக்கு உறு­து­ணை­யாக இருந்து மக்­க­ளின், நிறு­வ­னங்­க­ளின் சுமையை ஓர­ள­வுக்­குக் குறைக்­கும் என நம்­ப­லாம்.

குடு­ம்பங்­க­ளுக்கு நேர­டி­யாக பணம் தரு­வது, பய­னீட்­டுத் தள்­ளு­ப­டி­களை வழங்­கு­வது, நிறு­வனங்­க­ளுக்­குப் பலவித உத­வி­க­ளைச் செய்­வது எல்­லாம் புதிய நிவாரண திட்டத்தில் அடங்­கும்.

குடு­ம்பங்­க­ளைப் பொறுத்­த­வரை குறைந்த வரு­மா­னம் உள்­ளவை அதிக உத­வி­யைப் பெறும். எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நிலை­யில் இருப்­போ­ருக்­கும் திட்­டம் மிக­வும் உறு­து­ணை­யாக இருக்­கும்.

ஜிஎஸ்டி ரொக்கப் பற்­றுச்­சீட்டு பெறு­கின்ற, விலை­வாசி உயர்வு கார­ண­மாக அதி­கம் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு உள்­ள­வர்­க­ளுக்­குக் கூடு­த­லாக $300 பணம் கொடுக்­கப்­படும். எரி­பொ­ரு­ளுக்கு ஆகும் கூடு­தல் செலவை ஈடு­செய்­யும் வகையில் டாக்சி, தனி­யார் வாடகைக் கார் ஓட்­டு­நர்­கள் $150 தொகை பெறுவார்கள்.

கொம்­கேர் உத­வித் திட்­டத்­தில் பலன் பெறு­கின்ற ஒரு நபரைக் கொண்ட குடும்­பங்களுக்கு மாதம் $40 கிடைக்­கும். இதே­போல் நிறு­வ­னங்­க­ளுக்­கும் தோதான பொருத்­த­மான போதிய அள­வுக்கு நிவா ரணங்­கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

‘படிப்­ப­டியான சம்­பள உயர்வு பற்­றுத் திட்­டத்­தின்­கீழ்’ இடம்­பெ­றும் சம்­பள உயர்­வில் ஒரு பகு­தியை அர­சாங்­கம் ஏற்­றுக்­கொள்­ளும். தகுதி உள்ள முதிர்ச்­சி­நிலை ஊழி­யர்­களை முத­லா­ளி­கள் வேலை­யில் அமர்த்த ஆத­ரவு தரும் ‘வேலை உருவாக்கத் திற்கான ஊக்குவிப்புத்­ திட்­டம்’ ஆறு மாதத்­துக்கு நீட்­டிக்­கப்­படும். அதி­க பாதிப்­புக்கு ஆளாகும் இதர ஊழி­யர்­க­ளுக்­கும் உத­விக்­க­ரம் நீட்­டப்­பட்­டுள்­ளது.

இவை ஒரு­பு­றம் இருக்­கட்­டும். எரி­பொ­ருள் செலவு அதி­கரித்து இருப்­ப­தால் உணவு சேவைத் துறை, உணவு தயா­ரிப்­புத்­துறை, சில்­லறை வர்த்­த­கத்­துறை போன்ற துறை­களில் அதன் தாக்­கம் குறிப்­பி­டத்­தக்க அள­வுக்கு இருக்­கிறது.

இந்­தத் துறை­க­ளைச் சேர்ந்த சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் அதி­க­மாக பாதிக்­கப்­பட்டுள்ளன. இதைக் கருத்­தில் கொண்டு ஒரு புதிய திட்­டம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தத் திட்­டத்­தின்­கீழ் எரிசக்தி சிக்­க­னத் தீர்­வு­க­ளைக் கைகொள்ள அந்த நிறு­வ­ன­ங்க­ளுக்கு மானி­யம் உண்டு.

கொரோனா தலை­தூக்கி உலகை, பொரு­ளியலை நாசப்­ப­டுத்த தொடங்­கிய பிறகு அர­சாங்­கம் பல­முறை பல விதங்­களில் நிவா­ரண உத­வி­களை வழங்கி பொது­மக்­க­ளுக்கு உதவி வரு­கிறது.

தேவைக்கு ஏற்ப போதிய அள­வுக்கு அப்­போதைக்கு அப்­போது வழங்­கப்­பட்டு வந்­துள்­ளன.

கொரோனா பாதிப்­பு­களில் இருந்து உல­கப் பொரு­ளி­யல் தலைதூக்கி மீண்டுவர தொடங்கிய நிலை­யில், உக்­ரேன் போர் உள்­ளிட்ட பிரச்­சி­னை­களால் எரி­பொ­ருள், உண­வுப் பொருள் விலை­கள் வர­லாறு காரணாத அள­வுக்கு உயர்ந்­து­விட்­டன.

இறக்­கு­ம­தியை அதி­கம் சார்ந்­துள்ள சிங்­கப்­பூரில் அவற்­றின் தாக்­கம் குறிப்­பி­டத்­தக்க அள­வில் இருக்­கிறது.

எல்­லா­வற்­றை­யும் கருத்­தில் கொண்டு அர­சாங்­கம் விலை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முய­லா­மல் பாதிக்­கப்­ப­டு­வோ­ருக்கு ஆத­ரவை, உத­வி­களை வழங்­கு­கிறது. இதுவே சிறப்­பான அணு­கு­மு­றை­யாக இருக்­கும். கார­ணம் விலை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முயன்றால் விலைவாசிப் போக்கு தெரி­யா­மல்போய்­வி­டும். பரந்த அடிப்­ப­டை­யி­லான வரு­மான ஆத­ரவு அணு­கு­மு­றை­யைக் கைகொண்­டால் அது பண­வீக்­கத்­துக்­கான நெருக்­கு­தலை ஏற்­ப­டுத்தி விடும்.

அர­சுக்குச் செல­வி­னங்­கள் அதி­க­ரிக்கும் சூழ­லில் அத்­த­கைய ஓர் அணு­கு­முறை ஏற்­புடை­ய­தா­க­வும் இராது. ஆகை­யால்­தான் யார் யாருக்­குப் பாதிப்பு அதி­கமோ அவர்­க­ளுக்கு உத­விக்­க­ரம் நீட்ட அரசு கச்­சி­த­மான திட்­டத்தை அறி­வித்­துள்­ளது.

நிலைமை இன்­ன­மும் மோச­மா­னால் அடுத்த சுற்று ஆத­ரவும் உத­வி­களும் இடம்­பெ­றும் என்­றும் அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது.

சிர­ம­மான, சவா­லான கால­கட்­டத்­தில் வழக்­கம்­போல் அர­சாங்­கம் தான் செய்­ய­வேண்­டி­ய­வற்­றைப் சூழ்நிலைக்கு ஏற்ப செய்து பண­வீக்க வலி­யைக் குறைக்க வகை செய்­துள்­ளது. அது மட்டும் போதாது.

அந்த வலி தாங்க முடி­யாத அள­வுக்கு அதிக மாவ­தைத் தடுத்து, அதைத் தவிர்த்­துக்கொள்ள வேண்­டிய பொறுப்பு நிறு­வ­னங்­கள், குடும்­பங்­கள் பொது­மக்­க­ளுக்கு அதி­கம் என்­பதை மறந்­து­வி­டக் கூடாது. விலை­வாசி உயர்வு, வட்டி உயர்வு கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­க­ளைக் கூடு­மா­ன­வரை குறைத்­துக்கொள்ள அவர்கள் முய­ல­வேண்­டும்.

அனா­வ­சி­ய­மாக செலவு செய்­வது, மின்­சா­ரம், தண்­ணீரை அள­வுக்கு அதி­க­மாக பொறுப்பு இன்றி பயன்­ப­டுத்­து­வது போன்­ற­வற்றைக் குடு­ம்பங்­கள் குறைத்­துக்­கொள்ள வேண்­டும்.

நிறு­வ­னங்­கள் தாங்­கள் பொருள், சேவை­க­ளைப் பெறு­ம் ஏற்­பா­டு­க­ளைப் பல­மு­னைப்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டும்; இயன்­ற­போது நீண்டகால உடன்­பாடு­களைச் செய்­து­கொள்ள வேண்­டும்; எதிர்­கால விலை உயர்­வு­களில் இருந்து தப்­பிக்க புத்­தாக்­கங்­க­ளைக் கைகொள்­ள­வேண்­டும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!