இந்தியாவிற்குக் கூடுதல் விமான சேவைகள் வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூருக்கும் சென்னைக்கும் இடையே வாரத்திற்கு 17 விமானச் சேவைகளை வழங்கவிருக்கிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ். தற்போது வாரத்திற்கு 10 விமானச் சேவைகள் செயல்படுகின்றன.

அதைப் போல சிங்கப்பூருக்கும் கொச்சிக்கும் இடையே தற்போது செயல்பாட்டில் உள்ள வாரத்தின் ஏழு சேவைகள் இரு மடங்காகி 14 சேவைகளாக அதிகரிக்கப்படுகின்றன.

பெங்களூருவுக்குத் தற்போது வாரத்திற்கு ஏழு விமான சேவைகள் இயங்கும் நிலையில் அந்த எண்ணிக்கை 16ஆக உயர்கிறது.

அடுத்த சில மாதங்களில் படிப்படியாக இந்த விமானச் சேவைகள் கூட்டப்படும்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலுக்கு முந்தைய விமானச் சேவை எண்ணிக்கைக்கு நிகராக எதிர்வரும் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் முற்றிலும் மீண்டு வந்துள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு இருவழிகளிலும் அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்தி செய்ய சேவைகள் இந்த முக்கிய சந்தையில் கூட்டப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சலஸ், பாரிஸ், வான்கூவர் உள்ளிட்ட நகரங்களுக்கும் ஜப்பானுக்கும் விமானச் சேவைகளை அதிகரிக்கவிருக்கிறது இந்நிறுவனம்.

டிசம்பர் மாத இறுதிக்குள் கிருமிப் பரவல் சூழலுக்கு முந்தைய நிலையின் 81% அளவிற்கு எஸ்ஐஏ குழுமம் திரும்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!