இந்த ஆண்டின் 30வது வேலையிட மரணம்

மரத்­துண்­டால் அடி­பட்ட ஓர் ஊழி­யர் கடந்த புதன்­­கி­ழமை மருத்­து­வ­ம­னை­யில் மாண்­டார். அதன்­மூ­லம், இந்த ஆண்டு வேலை­யி­டங்­களில் இறந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 30ஆக உயர்ந்­துள்­ளது.

மாண்­ட­வர் 51 வயது சிங்­கப்­பூர் ஆட­வர். நிலத்­தூண் தாங்­கக்­கூ­டிய எடை­யைப் பரி­சோ­தனை செய்­து­கொண்­டி­ருந்­த­போது அதில் பயன்­ப­டுத்­தப்­பட்ட பிளை­வுட் மரத்­தின் ஒரு பகுதி உடைந்து பறந்து ஆட­வர் மீது பட்­ட­தில் அவர் காயம் அடைந்­தார்.

கடந்த ஜூலை 6ஆம் தேதி காலை 10 மணி அள­வில் பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் விபத்து நடந்­த­தாக மனி­த­வள அமைச்சு நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

ஆட­வர் சாங்கி பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். அவர் காயம் கார­ண­மாக ஒரு வாரம் கழித்து இறந்தார்.

இந்­தச் சம்­ப­வத்தை மனி­த­வள அமைச்சு விசா­ரித்து வரு­கிறது. சம்பந்­தப்­பட்ட கட்­டு­மான நிறு­வ­ன­மான பிபி­ஆர் பைலிங்­கி­டம் துளை­யிட்டு கட்­டட அடித்­த­ளம் அமைக்­கும் பணியை நிறுத்­தும்­படி அது உத்­த­ர­விட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் இவ்­வாண்டு அதி­க­மான வேலை­யிட விபத்­து­கள் ஏற்­பட்­டுள்­ளன. மே மாதத்தில் வேலைகளை நிறுத்தி பாதுகாப்பை மறுஆய்வு செய்யும்படி நிறுவனங் கள் வற்புறுத்தப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!