31வது உயிர்பலி; நாடாளுமன்றத்தில் வேலையிட பாதுகாப்பு பற்றி விவாதம்

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்­டின் முதல் ஏழு மாதங்­களில் வேலை தொடர்பில் 31 மர­ணங்­கள் நிகழ்ந்து இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

இத­னை­ய­டுத்து நாடா­ளு­மன்றத்­தில் ஊழி­யர்­கள் பற்­றி­யும் வேலை யிடப் பாது­காப்பு குறித்­தும் விவா­திக்­கப்­ப­டு­கிறது.

மன்­றத்­தில் இந்தப் பிரச்­சினை தொடர்­பி­லான ஒத்தி­வைப்புத் தீர்­மா­னம் ஒன்று அடுத்த வாரம் தாக்­க­லா­கும். ராடின் மாஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மெல்­வின் யோங், அந்தத் தீர்­மா­னத்­தைத் தாக்­கல் செய்து உரை நிகழ்த்­து­வார்.

மேலும் பல விபத்­து­கள் நிகழ்­வதைத் தடுக்­கும் நோக்­கத்­தில் வேலை­யி­டப் பாது­காப்பு பிரச்­சினை பற்றி உட­ன­டி­யாக விவா­திக்க வேண்­டிய தேவை இருக்­கிறது என்று தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் உதவி தலை­மைச் செய­லா­ள­ருமான திரு வோங் நேற்று ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தார்.

வேலை­யி­டப் பாது­காப்­பும் ஊழி­யர்­க­ளின் உடல் நல­மும் முத­லாளி­கள், ஊழி­யர்­கள் இரு­வ­ரின் ஒட்டு­மொத்த பொறுப்­பா­கும் என்­பதை மறு­ப­டி­யும் நினை­வு­ப­டுத்த தான் விரும்­பு­வ­தாக அவர் தெரி­வித்து இருக்­கி­றார்.

நாடா­ளு­மன்றக் கூட்ட நிறை­வின்­போது உறுப்­பி­னர் 20 நிமி­டம் பேசு­வ­தற்கு அந்த ஒத்­தி­வைப்­புத் தீர்­மா­னம் அனு­மதி வழங்­கும். அந்தத் தீர்­மா­னம் திங்­கட்­கி­ழமை தாக்­க­லா­கும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தின் முடி­வில் ஒத்­தி­வைப்­புத் தீர்­மா­னத்தைத் தாக்­கல் செய்ய ஒரே ஓர் உறுப்­பி­ன­ருக்கு மட்­டும்தான் அனு­மதி கிடைக்­கும்.

சீட்டு குலுக்­கின் மூலம் திரு யோங் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்.

விவா­திக்­கப்­படும் அம்­சத்­திற்குப் பொறுப்­பான அமைச்­சர், திரு யோங் பேசி­ய­ பிறகு 10 நிமி­டம் வரை விளக்­கம் அளிக்­கக்­கூ­டும்.

சிங்­கப்­பூ­ரில் சென்ற வாரம் வரை 31 வேலை­யிட மர­ணங்­கள் நிகழ்ந்து இருக்­கின்­றன.

2020ஆம் ஆண்டு முழு­வ­துமே 30 வேலை­யிட மர­ணங்­கள்­தான் நிகழ்ந்­தன. சென்ற ஆண்டு முழு­வதற்­கும் அத்­த­கைய மர­ணங்­களின் எண்­ணிக்கை 37ஆக இருந்­தது.

ஆகக் கடை­சி­யாக இம்­மா­தம் 20ஆம் தேதி 55 வயது சிங்­கப்­பூரர் ஒரு­வர் மாண்­டார்.

புலாவ் பிரா­னி­யில் இருக்­கும் காவல்­து­றை­யின் கட­லோரக் காவல்­படை தலை­மை­ய­கத்­தில் ஒரு படகில் இருந்து விழுந்து அந்­தச் சிங்­கப்­பூ­ரர் மாண்­டு­விட்­டார்.

அவர், அந்­தப் பட­கின் மோட்­டார் இயந்­தி­ரத்­தில் சிக்­கிக்கொண்­டார். சம்­ப­வம் நிகழ்ந்­த­போது அவர் மட்­டுமே அந்­தப் பட­கில் இருந்­தார்.

இத­னி­டையே, கடல்­துறை நிறு­வ­னங்­களும் ஊழி­யர்­களும் கட­லோர தொழில்­து­றை­யி­ன­ரும் வேலையைத் தொடங்­கு­வதற்கு முன்பாகவே வேலை இடத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­து­கள் பற்றி மதிப்­பிட வேண்டும் என்பதையும் திரு யோங் நினைவு­படுத்­தி­னார்.

பரு­வ­நி­லைக்கு ஏற்ப மாற்றுத் திட்­டங்­களை அவர்­கள் தீட்டி வைத்­தி­ருக்க வேண்­டும் என்றார் அவர்.

"ஒவ்­வொரு நாளும் ஒவ்­வோர் ஊழி­ய­ரும் வேலையை முடித்து பாது­காப்­பாக வீடு திரும்பி தங்­கள் அன்­பர்­க­ளு­டன் மகிழ்­வதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் எல்­லா­ரும் சேர்ந்து ஒன்­றாக பாடு­பட்டு வேலை­யி­டப் பாது­காப்பு மற்­றும் ஊழி­யர் நல நடை­மு­றை­களை மேம்­ப­டுத்­து­வோம்," என அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!