5க்கும் குறைந்த வயது சிறார்களுக்கு கொவிட்-19 அபாயம் அதிகம்

மற்ற வயது சிறார்­க­ளைக் காட்­டிலும் ஐந்­துக்­கும் குறைந்த வய­துடைய சிறார்­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்­றும் அத­னால் கடும் நோய் பாதிப்­பும் ஏற்­படும் சாத்­தி­யம் அதி­கம் என்று சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி நேற்று கூறி­னார்.

தடுப்­பூ­சிப் பாது­காப்பு இன்­னும் கிடைக்­காத நிலை­யில் ஐந்­துக்­கும் குறைந்த வய­து­டைய பிரி­வி­னர் இருப்­ப­தாக அவர் நேற்று நாடாளு­மன்­றத்­தில் சுட்­டி­னார். இவ்­வாண்­டின் இறுதி காலாண்­டில் இவர்­களுக்­குத் தடுப்­பூசி போடும் பணி­களை சுகா­தார அமைச்சு தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, இக்­கு­றிப்­பிட்ட பிரி­வி­ன­ருக்­கான தடுப்­பூசி சாத்­தி­யம் குறித்து ஃபைசர்/பயோ­என்­டெக் மற்­றும் மொடர்னா நிறு­வனங்­கள் சமர்ப்­பித்­துள்ள தர­வு­களை சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் மறு­ஆய்வு செய்­து­வ­ரு­வ­தாக டாக்­டர் ஜனில் தெரி­வித்­தார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் கடும் பாதிப்­புக்கு உள்­ளா­கும் முதி­ய­வர் எண்­ணிக்­கையை ஒப்­பி­டு­கை­யில் சிறார் எண்­ணிக்கை குறைவே என்­றும் அமைச்­சர் ஜனில் வலி­யுறுத்­தி­னார்.

அண்­மை­யில் கொரோனா கிருமி பாதிப்­பால் உயி­ரி­ழந்த இரு இளம் பிள்­ளை­க­ளைப் பற்­றிய செய்தி தமக்­குக் கவ­லை­ய­ளித்­த­தா­கக் கூறிய டாக்­டர் ஜனில், பாதிக்­கப்­பட்ட இரு குடும்­பங்­க­ளுக்­கும் தமது அனு­தா­பத்­தைத் தெரி­வித்­துக்­கொண்­டார். மேலும், 5 முதல் 11 வய­து­டைய பிள்­ளை­க­ளுக்கு ஒரு கட்­டத்­தில் மூன்­றா­வது எம்­ஆர்­என்ஏ தடுப்­பூசி தேவைப்­ப­ட­லாம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார். ஏறத்­தாழ இரு மாதங்­களில் இந்­தப் பிரி­வி­ன­ருக்­குக் கூடு­தல் தடுப்­பூ­சி­கள் போடு­வ­தற்கு அமைச்சு தயா­ராகி வரு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

மீண்­டும் கொவிட்-19 தொற்­று­வது குறித்து அமைச்­சர் ஓங்

இதற்­கி­டையே, கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டாத ஒரு­வ­ரு­டன் ஒப்­பி­டு­கை­யில் நான்­கி­லி­ருந்து ஏழு மாதங்­க­ளுக்கு முன் தொற்­றுக்கு ஆளா­கி­ய­வ­ருக்கு மீண்­டும் கிரு­மித்­தொற்று ஏற்­படும் சாத்­தி­யம் 3% மட்­டுமே என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார். ஓமிக்­ரான் கிருமி திரி­பு­க­ளால் மீண்­டும் தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் விகி­தம் குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு, அவர் இவ்­வாறு பதி­ல­ளித்­தார்.

கடந்த மூன்று மாதங்­களில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு மீண்­டும் கொவிட்-19 ஏற்­ப­டு­வ­தும் அரி­தான ஒன்று என்­றார் அவர்.

இருப்­பி­னும் முன்­னால் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­தில் ஏற்­பட்ட பாது­காப்­புத் தன்மை, நாள­டை­வில் குறை­யும் என்­பதை உணர்ந்து கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டு­விட்­ட­தால் பாது­காப்பு தேவை­யில்லை என நினைத்­து­வி­டக்­கூ­டாது என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

தின­மும் பதி­வா­கும் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்­கை­யில் தொற்­றுக்கு மீண்­டும் ஆளா­வோ­ரின் எண்­ணிக்­கை­யை­யும் சுகா­தார அமைச்சு சேர்க்­க­வேண்­டும் என்று திரு ஓங் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, மருத்­து­வக் கார­ணத்­தால் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்­குத் தகு­தி­பெ­றா­த­வர்­கள், ஆஸ்ட்­ரா­ஸெ­னகா கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வ­தற்கு சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் அதன் ஒப்­பு­தலை அளித்­துள்­ளது. சிங்­கப்­பூர்­வா­சி­களில் 7 விழுக்­காட்­டி­னர் இன்­னும் தடுப்­பூசி போடா­மல் உள்­ள­னர்.

2021ன் கொவிட்-19 உயி­ரி­ழப்­பு எண்ணிக்கையில் மாற்றம்

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் கடந்த ஆண்டு உயி­ரி­ழந்­த­வர்­களின் மொத்த எண்­ணிக்­கை­யில் மாற்­றம் உள்­ள­தாக சுகா­தார அமைச்சு நேற்று அறிக்கை வெளி­யிட்­டது. பிறப்பு, இறப்பு பதி­வ­கம் அதன் 2021ஆம் ஆண்­டுக்­கான அறிக்­கையை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யில் மேலும் சில உயி­ரி­ழப்­பு­களை அமைச்சு முன்­ன­தாக இருந்த எண்­ணிக்­கை­யில் சேர்த்துள்­ளது. சுகா­தார அமைச்­சிடம் தெரி­விக்­கப்­ப­டாத மர­ணங்­களும் இதில் அடங்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!