‘கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் நீண்டகாலம் பாதிக்கப்படும் சாத்தியம் குறைவு’

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 நோய்க்கு எதி­ரான தடுப்­பூசி செலுத்­தி­யும் ஓமிக்­ரான் ரகக் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னோர் நீண்­ட­கால கொவிட் அறி­கு­றி­கள் எனும் சிக்­கலை எதிர்­நோக்­கும் சாத்­தி­யம் குறைவு என்று கூறப்­பட்­டுள்­ளது.

தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் ஆய்­வுக் கட்­ட­மைப்­புத் தலை­வ­ரான டாக்­டர் பர்­னபி யங் இவ்­வாறு கூறி­னார்.

கிரு­மித்தொற்­றி­லி­ருந்து குண­மா­கிப் பல மாதங்­கள் சென்ற நிலை­யி­லும் நெஞ்­சு­வலி, மூச்­சுத் திண­றல், சோர்வு ஆகிய அறி­கு­றி­கள் தென்­பட்­டால் அது நீண்­ட­கால கொவிட் பாதிப்பு என வகைப்­படுத்தப்­படும்.

தடுப்­பூசி செலுத்­திக்­கொண்­டோர் ஓமிக்­ரான் ரக கொவிட்-19 கிருமித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தால், அவர்­க­ளி­டையே நீண்­ட­கால கொவிட் பாதிப்­பின் தீவி­ரம் குறை­வா­கக் காணப்­பட்­ட­தா­க­வும் குறு­கிய காலமே அது நீடித்­த­தா­க­வும் டாக்­டர் யங் குறிப்­பிட்­டார்.

தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் இங்­குள்ள நோயா­ளி­க­ளைக் கையாண்ட அனு­ப­வத்­தின் அடிப்­ப­டை­யில் இவ்­வாறு கரு­து­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

நீண்­ட­கால கொவிட் பாதிப்­பைக் கண்­ட­றி­யவோ அத­னைக் குணப்­படுத்­தவோ குறிப்­பிட்ட நடை­முறை அல்­லது சிகிச்­சை­முறை தற்­போது இல்லை என்­பதை டாக்­டர் யங் சுட்­டி­னார்.

இருப்­பி­னும் அறி­கு­றி­களில் இருந்து நிவா­ர­ணம் பெறு­வ­தற்­கான மருந்­து­கள் உள்­ளன; மற்ற நோய்­களால் அந்த அறி­கு­றி­கள் ஏற்­ப­டு­கி­றதா என்­ப­தைக் கண்­ட­றிய ரத்­தப் பரி­சோ­தனை உள்­ளிட்ட சோத­னை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

கொவிட்-19 நோயா­ளி­களில் எட்­டில் ஒரு­வ­ருக்கு நீண்­ட­கால கொவிட் பாதிப்பு ஏற்­ப­டு­வ­தாக அண்மையில் லேன்­செட் மருத்­துவ சஞ்­சி­கை­யில் வெளி­யான ஆய்வு முடி­வைத் தொடர்ந்து அவர் இவ்­வாறு விளக்கமளித்தார்.

நெதர்­லாந்து ஆய்­வா­ளர்­கள் அந்த ஆய்வை மேற்­கொண்­ட­னர். நெஞ்சு வலி, மூச்சு விடு­வ­தில் சிர­மம், தசை வலி போன்­றவை மட்­டு­மன்றி தலை வலி, கண்­களில் அரிப்பு, மயக்­கம், முதுகு வலி, சோர்வு போன்ற அறி­கு­றி­கள் பல மாதங்­க­ளுக்கு நீடிப்­ப­தாக ஆய்­வில் தெரி­ய­வந்­தது.

சென்ற வாரம், சிங்­கப்­பூர் ஆய்­வுக் குழு லேன்­செட் சஞ்­சி­கை­யில் ஆய்­வுக் கட்­டு­ரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், உலக மக்­கள்தொகையில் ஏறக்­கு­றைய ஐந்து விழுக்­காட்­டி­ன­ருக்கு நீண்­ட­கால கொவிட் பாதிப்பு ஏற்­ப­டக்­கூடும் என்­றும் அவர்­க­ளின் நுக­ரும் திறனோ சுவை­யு­ணர்ச்­சியோ பாதிக்­கப்­படும் என்­றும் தெரி­விக்கப்­பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!