தீபாவளிக்காக மேற்கொள்ளப்பட்ட உணவு நன்கொடை முயற்சி

தீபாவளிக்காக மேற்கொள்ளப்பட்ட உணவு நன்கொடை முயற்சி

1 mins read
90018fbc-121e-48a7-ad32-a740d72dbf35
-

தீபா­வ­ளியையொட்டி குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் உணவு பற்­றுச்­சீட்­டு­களை நன்­கொ­டை­யாக அளித்­துள்­ளது மெக்­டோ­னல்ட்ஸ். சுமார் 750 பேருக்கு 3,000 வேளை­க­ளுக்­கான உண­வுப் பற்­றுச்­சீட்­டுக்­களை சிண்­டா­வின் 'புரோ­ஜெக்ட் கிவ்' திட்­டத்­துக்­கான இடத்­தில் மெக்­டோ­னல்ட்ஸ் நேற்று அளித்­தது.

பற்­றுச்­சீட்­டு­க­ளைக் கொண்டு, அதன் எல்லா கிளை­க­ளி­லும் 'சிக்­கன் மெக்­கி­ரிஸ்பி எக்ஸ்ட்ரா வேல்யூ மீல்ஸ்'களைப் பெற்­றுக்­கொள்­ள­லாம். இந்த சிறு உத­வி­யின்­மூ­லம் குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்கு தீபா­வ­ளி­யைக் கொண்­டா­டும் குதூ­க­லம் கிடைக்­கும் என்று தான் நம்­பு­வ­தா­க மெக்­டோ­னல்ட்­ஸின் நிர்­வாகி திரு பெஞ்­ச­மின் போ கூறி­னார். பல நிறு­வ­னங்­க­ளு­டன் ஒன்­றி­ணைந்து செயல்­படும் சிண்­டா­வு­டன் சேர்ந்து, இவ்­வாண்டு சமூ­கத்­துக்­குப் பங்­க­ளிப்­ப­தில் அவர் மகிழ்ச்­சி­ தெரி­வித்­தார்.

மெக்­டோ­னல்ட்ஸ் சிங்­கப்­பூ­ரின் வர்த்­தக நிர்­வாகி ரெஜித் கோபி பற்­றுச்­சீட்­டு­க­ளைக் கொடுக்க, அவற்றை வாங்­கிக்­கொண்ட சிண்­டா­வின் தலைமை நிர்­வாகி அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன், தீபா­வ­ளிக் காலத்­தில் குடும்ப உற­வு­களை வலுப்­படுத்த மெக்­டோ­னல்ட்­ஸின் உணவு நன்­கொடை உத­வும் என்றார். சமூ­கத்­துக்கு உத­வு­வ­தில் மெக்­டோ­னல்ட்ஸ், சிண்டா ஆகி­ய­வற்­றின் கூட்டு முயற்சி தொட­ரும் என்றும் நம்­பிக்­கை தெரி­வித்­தார்.

தேவைப்­ப­டு­வோ­ருக்கு ஒன்­றி­ணைந்து உத­விக்­க­ரம் நீட்­டு­வ­தன் முக்­கி­யத்­து­வத்தை இவ்­வாறு இணைந்து மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­கள் உறு­திப்­ப­டு­த்துவதா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

விஷ்ணு வர்தினி