வகுப்பறைக்கு அப்பால் கற்றலை ஊக்குவித்த ‘தமிழில் ஒரு சுற்றுலா’

வகுப்­பறைக்கு அப்பால் தமிழ்­மொழி கற்­றலை ஊக்­கு­வித்து, சிங்­கப்­பூர் குறித்த புரிதலை மேம்படுத்தியது, தொடக்­கப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்ட ‘தமி­ழில் ஒரு சுற்­றுலா’ நிகழ்ச்சி. இம்மாதம் 24ஆம் தேதி, நிப்­பான் மீன் பண்ணை, ஐ.டி. மெங் தோட்­டம், சிங்­கப்­பூர் நக­ரக் காட்­சிக்­கூ­டம் என மூன்று இடங்­களைச் சுற்றிப்பார்த்தனர் மாண­வர்­கள்.

‘த திங்­கர்ஸ்’ கற்­றல் நிலை­ய­மும் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு­வும் இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்த நிகழ்ச்­சி­யில் ஏறக்­கு­றைய 25 தொடக்­கப் பள்­ளி­க­ளின் 60க்கு மேற்­பட்ட மாண­வர்­கள் கலந்து­கொண்­ட­னர். ஒவ்­வோர் இடத்­தின் சிறப்­பு­க­ளை­யும் அறிந்­து­கொண்­ட­தோடு இடத்­துக்­கேற்ற புதிய தமிழ்ச் சொற்­களை மாண­வர்­கள் கற்­றுக்­கொண்­ட­னர்.

இயற்கை, சுற்­றுச்­சூ­ழல், மீன் பரா­ம­ரிப்பு போன்­றவை குறித்த தக­வல்­க­ளை­யும் அவற்­றின் அறி­வி­யல் பின்­ன­ணி­க­ளை­யும் கற்­றுக்­கொள்ள வாய்ப்­ப­ளித்­தன, நிப்­பான் மீன் பண்­ணை­யும் ஐ.டி. மெங் தோட்­ட­மும்.

“மீன்­க­ளின் கழி­வு­கள் செடி­களுக்கு உர­மா­கப் பயன்­ப­டு­வதை அறிந்­து­கொண்­டேன். மீன் பரா­ம­ரிப்பு குறித்­தும் நாங்­கள் கற்­றுக்­கொண்­டோம்,” என்­றார் சுற்­று­லா­வில் கலந்துகொண்ட ராஃபிள்ஸ் பெண்­கள் தொடக்­கப் பள்­ளி­யில் ஐந்­தாம் வகுப்­பில் பயி­லும் சக்தி தய­லாம் பிள்ளை.

SPH Brightcove Video

சிங்­கப்­பூ­ரின் கடந்­த­கால, தற்­கால, வருங்­கா­லச் சூழல்­க­ளைக் காட்­டும் சிங்­கப்­பூர் நக­ரக் காட்­சிக் கூடத்­தில் நவீன சிங்­கப்­பூ­ரின் வளர்ச்சி குறித்து அறிந்­து­கொண்­ட­னர் மாண­வர்­கள். அறி­வார்ந்த தேச­மாக உரு­மா­றி­வ­ரும் சிங்­கப்­பூ­ரில் தங்­க­ளது வருங்­கா­லத்­தைக் கற்­பனை செய்­து­பார்க்­கும் நட­வடிக்­கை­க­ளி­லும் ஈடு­பட்­ட­னர்.

“பிற நாடு­களில் நீர், மின்­சார நிர்­வாக அமைப்­பு­கள் தரைக்­கு­மேல் அமைக்­கப்­பட்டு உள்­ளன. சிங்­கப்­பூ­ரில் இவை அனைத்­துமே நிலத்­தடி­யில் இருப்­பதை அறிந்து வியந்­தேன். இத­னால், இடத்தை மிச்­சப்­ப­டுத்த முடி­வ­தைத் தெரிந்­து­கொண்­டேன்,” என்­றார் நார்த்­லேண்ட் தொடக்­கப்­பள்­ளி­யின் நான்­காம் வகுப்பு மாண­வர் முக­மது நூர் ஜாஹீர்.

தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக்­கு­ழு­வின் செயற்­குழு உறுப்­பி­ன­ரான கலை­வாணி இளங்கோ இச்­சுற்­று­லா­வின் நோக்­கத்­தைப் பற்றி கூறு­கை­யில், “இந்த அனு­ப­வம் வகுப்­பறைக்கு அப்­பா­லும் தமிழ்­மொ­ழி­யைத் தொடர்ந்து ஆர்­வத்­து­டன் பேச ஊக்­கு­விப்­ப­தோடு மாண­வர்­கள் சிங்­கப்­பூ­ரைப் பற்றி அறிந்­து­கொள்­வ­தற்­கான வாய்ப்­பினை அளிக்­கிறது,” என்­றார். இச்­சுற்­று­லா­வுக்­கெ­னத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஒவ்­வோர் இட­மும் வெவ்­வேறு வகை­யான அனு­ப­வங்­க­ளைத் தந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

“மீன் பண்­ணை­யில் மீன் பிடித்­தது மாண­வர்­க­ளுக்கு கட்­டா­யம் புது அனு­ப­வ­மாக இருந்­தி­ருக்­கும். ஐ.டி. மெங் தோட்­டத்­தில் இடப்­பற்­றாக்­குறை உள்ள சிங்­கப்­பூ­ரில் இத்­த­கைய ஒரு தோட்­டம் எவ்­வாறு அமைக்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தை அவர்­கள் அறிந்­து­கொண்­ட­னர்,” என்­றார் அவர்.

குழுக்­க­ளாக சுற்­றிப்­பார்த்து, நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தால், புதிய நண்­பர்­க­ளைச் சந்­தித்து தமி­ழில் கலந்­து­ரை­யாட இது நல்ல வாய்ப்­பாக அமைந்­த­தெ­னக் கூறி­னார் தொடக்­க­நிலை நான்­காம் வகுப்பு மாணவி வைஷ்­ணவி சுவாமி­நா­தன்.

நண்­பர்­கள் மூல­மாக இச்­சுற்­று­லா­வைப் பற்றி தெரிந்­து­கொண்ட ஐந்­தாம் வகுப்பு மாண­வர் தீலன் ஸ்ரீராம், பள்ளி விடு­மு­றையை நல்­ல­மு­றை­யில் பயன்­ப­டுத்­திப் பய­ன­டைந்த மன­நி­றை­வினை இவ்­வ­னு­பவம் கொடுத்­த­தா­கக் கூறி­னார்.

மாண­வர்­க­ளின் படைப்­பாக்­கத் திறனை வளர்க்­கும் விதமாக ஆண்டு­தோ­றும் நடை­பெ­றும் ‘தமி­ழில் ஒரு சுற்­றுலா’ நிகழ்ச்சி, ஈராண்டு­க­ளுக்­குப் பின்­னர் நடை­பெற்றுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!