கூட்ட நெரிசலைத் தடுக்க காவல்துறை பணியாற்றுகிறது

பெரும் கூட்­டம் கூடும் நிகழ்ச்­சி­களில் கூட்ட நெரி­ச­லைத் தடுக்க காவல்­துறை அவற்­றின் ஏற்­பாட்­டா­ளர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்றுவதாக உள்­துறை துணை அமைச்­சர் சுன் ஷுவே­லிங் கூறி­யுள்­ளார். கூட்­டத்­தைக் கட்­டுப்­ ப­டுத்­த­வும் அள­வுக்கு அதி­க­மான கூட்­டம் திரள்­வ­தைத் தடுக்­க­வும் போது­மான நுழை­வா­யில்­களும் வெளி­வ­ழி­கள் இருப்­பதை உறு­தி­ செய்­யவும் இணைந்து நட­வ­டிக்கை எடுக்கப்படுகிறது.

பெரிய நிகழ்ச்­சி­களில் அத்­த­கைய குழப்­பங்­கள் நிகழ்ந்­தால், காவல்­து­றை­யி­னர் தலை­யிட்டு அதற்­கான கார­ணத்­தைக் களை­வர் என்று திரு­வாட்டி சுன் நேற்று கூறினார்.

தேவைப்­பட்­டால் கூட்­டமான இடத்­தி­லி­ருந்து மக்­கள் கலை ­வ­தற்­கான தெளி­வான வழி­மு­றை­ க­ளைக் காவல்­து­றை­யி­னர் வழங்­கு­வர் என்­றார் அவர்.

பண்­டி­கைக் காலங்­க­ளி­லும் பொது நிகழ்ச்­சி­க­ளி­லும் கூட்ட நெரி­ச­லால் ஏற்­ப­டக்கூடிய அபா­யத்­தைச் சமா­ளிப்­பது பற்றி ஆறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு அவர் பதி­ல­ளித்­தார்.

வெளி­நா­டு­களில் கூட்­டம் நெருக்­கித் தள்­ளி­ய­தால் நடந்த அசம்­பா­வி­தங்­க­ளைத் தொடர்ந்து மன்ற உறுப்­பி­னர்­கள் அக்­கேள்வி­ களை எழுப்பி இருந்­த­னர். இந்­தோ­னீ­சி­யா­வி­லும் தென் கொரி­யா­வி­லும் அண்­மை­யில் நடந்த துய­ரச் சம்­ப­வங்­களில் மொத்­தம் சுமார் 270 பேர் மாண்­ட­னர்.

குறிப்­பிட்ட பண்­டி­கைக் காலங்­களில் கூட்­டம் அதி­க­மா­கத் திர­ளும் என்று காவல்­து­றைக்­குத் தெரி­யும் என்­றார். அந்­நே­ரங்­களில் காவல்­து­றை­யி­னர் அதிக விழிப்­பு­டன் இருப்­ப­தா­க­வும், எங்கு கூட்­டம் கூடு­மென அவர்­க­ளுக்­குத் தெரி­யும் என்­றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!