முழுநேர காவல்துறை தேசிய சேவையாளரான ஒருவர், பாலியல் தொழில் நடத்தும் பெண்ணைப் போல நடித்து மூன்று ஆடவர்களை ஏமாற்றி மொத்தம் $1,000க்கும் மேற்பட்ட பணத்தைக் கறந்துவிட்டார்.
லிம் சின் யி என்ற இந்த 23 வயது சேவையாளர், நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த அக்டோபர் மாதம் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு இன்று வியாழக்கிழமை மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட ஆடவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்தக் குற்றச்செயல் 2021 ஜூன் மாதம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இவரிடம் ஏமாந்த மூன்றாவது நபர் காவல்துறையிடம் புகார் செய்தார்.