புக்கிட் பாஞ்சாங் குழுத்தொகுதியின் பொங்கல் விழா பெண்டிங் சாலையில் அமைந்துள்ள திறந்தவெளியில் கொண்டாடப்பட்டது. 16-வது ஆண்டாக கொண்டாடப்படும் இவ்விழாவில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள், நேரடி உணவு சாவடிகள் என பல்வேறு அம்சங்கள் இருந்தன.
பொங்கல் வைக்கும் அங்கமும், மாடுகளும் பொங்கல் திருநாளின் குதூகலத்தை பார்வையாளர்கள் மத்தியில் பெரிதும் தூண்டின. பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உரி அடித்தல், பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வெளியுறவுத்துறை அமைச்சரும் ஹாலந்து - புக்கிட் தீமா நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இவருடன் அத்தொகுதிக்கான மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் சியாவும் கலந்துகொண்டார்.
விழாவின் முக்கிய அங்கமாக சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றன இரண்டு சாதனைகள்.
மேல் விவரங்கள் நாளைய தமிழ் முரசில்.