ஒரே கணக்கில் 7 அட்டைகளை நிர்வகிக்கலாம்

குடும்பத்தினரின் ஈஸி-லிங்க் பயண அட்டைகளுக்குப் பணம் நிரப்புவதை எளிதாக்கும் புதிய நடைமுறை அறிமுகம்

பிள்­ளை­கள், வய­தான பெற்­றோர் எனக் குடும்­பத்­தி­னர் பல­ரின் ஈஸி-லிங்க் அட்­டை­க­ளுக்­குப் பணம் நிரப்­பும் பொறுப்பில் உள்ள பய­ணி­க­ளுக்கு உத­வும் திட்­டம் அறி­மு­கம் கண்­டுள்­ளது.

புதிய குடும்­பக் கணக்­குத் திட்­டம் இவ்­வாறு தொகை நிரப்­பு­வதை எளி­தாக்­கும்.

இதன்கீழ், ஒரு கணக்­கு­டன் ஏழு ஈஸி-லிங்க் அட்­டை­கள் வரை இணைக்க முடி­யும்.

பின்­னர் ஈஸி-லிங்க் கைப்­பேசிச் செயலி மூல­மாக தொலை இயக்கமுறையில் எங்கிருந்தும் அந்த அட்­டை­களில் தொகையை நிரப்பலாம்.

முன்பு ஒரு கணக்­கு­டன் ஓர் அட்­டையை மட்­டுமே இணைக்க முடிந்­தது.

குடும்­பக் கணக்­கைத் தொடங்­கு­ப­வர் அதனை நிர்­வ­கிக்­கும் உரி­மை­யைப் பெறு­வார்.

அவர் பின்­னர் ‘சிம்ப்­ளிகோ ஈஸி-லிங்க்’ அல்­லது ‘சிம்ப்­ளிகோ’ சலு­கைக் கட்­டண அட்டை வைத்­தி­ருக்­கும் ஆறு பேரை இந்­தக் கணக்­கைச் சார்ந்­தி­ருப்­போ­ராக சேரும்­படி அழைப்பு விடுக்­க­லாம்.

சார்ந்­தி­ருப்­போர் பயண அட்­டை­கள் எங்­கெங்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டன என்ற விவ­ரங்­களை கணக்கை நிர்­வ­கிப்­ப­வர் அறிய இய­லும்.

மறதிநோயால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் பரா­ம­ரிப்­பா­ளர்­கள் போன்­றோ­ருக்கு இது பெரும் உதவியாக இருக்குமென ஈஸி-லிங்க் நிறு­வனம் தெரி­வித்­தது.

இப்­போ­தைக்கு, தொடக்­கப்­பள்ளி, உயர்­நி­லைப் பள்ளி, தொடக்­கக் கல்­லூ­ரி­களில் பயி­லும் மாண­வர்­க­ளுக்­கான சலு­கைக் கட்­டண அட்­டை­களை இத்­த­கைய குடும்­பக் கணக்­கு­டன் இணைக்க இய­லாது.

இருப்­பி­னும் இவ்­வாண்­டின் பிற்­ப­கு­தி­யில் அவற்­றை­யும் இணைக்­கத் திட்­ட­மி­டப்­ப­டு­வ­தாக நிறு­வ­னம் குறிப்­பிட்­டது.

“குடும்­பங்­க­ளின் அன்­றா­டச் செல­வு­கள், பய­ணங்­கள் ஆகிய இரு அம்­சங்­க­ளின் செயல்­திறனை மேம்­ப­டுத்தி, அனை­வ­ருக்­கும் மகிழ்ச்சி தரும் வகை­யில் நிர்­வ­கிப்­பது சிறிய செய­லா­கத் தோன்­றி­னா­லும் அது மிக­வும் முக்­கி­ய­மா­னது.

“புதிய குடும்­பக் கணக்கு இதற்­குக் கைகொ­டுக்­கும் என நம்­பு­கி­றோம்,” என்று ஈஸி-லிங்க் நிறு­வ­னத் தலைமை நிர்­வாக அதி­காரி நிக்­க­லஸ் லீ கூறி­னார்.

ஈஸி-லிங்­கின் மின்­னி­லக்­கச் சேவைக் கட்­ட­மைப்­பில் மேலும் அதிக எண்­ணிக்­கை­யில் முதிய பய­ணி­க­ளை­யும் சார்ந்­தி­ருப்­போ­ரை­யும் இணைப்­பது இப்­பு­திய திட்­டத்­தின் நோக்­கம்.

வருங்­கா­லத்­தில் இதில் மேலும் பய­னுள்ள அம்­சங்­கள் சேர்க்­கப்­படும்.

எடுத்­துக்­காட்­டாக, பயண அட்­டை­யில் மீத­மி­ருக்­கும் தொகை குறை­யும்­போது, குடும்­பக் கணக்கை நிர்­வ­கிப்­ப­வ­ருக்கு, அது­கு­றித்து செயலி மூலம் தக­வல் அனுப்­பப்­படும் என்று நிறு­வனம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!