பொருளியலாளர், விளையாட்டாளர், கவிஞர் எனப் பன்முகம் கொண்டவர்

‘தலை­சி­றந்த பொரு­ளி­யல் சிந்­த­னை­யா­ளர்’

அர­சி­ய­லில் நுழை­வ­தற்­கு­முன், 1982ஆம் ஆண்டு சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தில் ஒரு பொரு­ளி­ய­லா­ள­ரா­கச் சேர்ந்து, தமது வாழ்க்­கை­த்­தொ­ழி­லைத் தொடங்­கி­னார் திரு தர்­மன் சண்மு­க­ரத்­னம். பின்­னர் 1995ஆம் ஆண்டு கல்வி அமைச்­சில் சேர்ந்த அவர், ஈராண்­டு­க­ளுக்­குப்­பின் மீண்­டும் நாணய ஆணை­யத்­திற்­குத் திரும்­பி­னார்.

1999ஆம் ஆண்டு பொது நிர்வாகத் தங்­கப் பதக்­கம் பெற்ற இவர், 2001ஆம் ஆண்­டில் நாணய ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்கு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டார்.

சிங்­கப்­பூரை ஒரு ‘நிதி மைய­மாக’ மாற்­றி­ய­தில் இவ­ருக்­குப் பெரும்­பங்­குண்டு. நிதி­ய­மைச்­ச­ராக ஒன்­ப­தாண்­டு­கா­லம் பதவி வகித்த இவர், சிங்­கப்­பூர் ‘நிதித்­து­றை­ப் பேரரசர்’ என அழைக்­கப்­பட்­டார்.

திரு தர்­ம­னு­டன் இணைந்து பணி­யாற்­றி­ய­வர்­கள் அவரை ‘சிங்கப்­பூ­ரின் தலை­சி­றந்த பொரு­ளியல் சிந்­த­னை­யா­ளர்­களில் ஒரு­வர்’ என வரு­ணித்­த­னர்.

அர­சி­யல் பய­ணம்

கடந்த 2001ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்­த­லில் மக்­கள் செயல் கட்­சி­யின் ‘சூப்­பர் செவன்’ வேட்­பா­ளர்­களில் ஒரு­வ­ரா­கப் போட்­டி­யிட்­டார் திரு தர்­மன்.

அப்­போது புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட ஜூரோங் குழுத்­தொ­குதி­யில் இப்­போ­தைய அதி­பர் ஹலிமா யாக்­கோப், திரு லிம் பூன் ஹெங், திரு­வாட்டி யு ஃபூ யீ சூன், டாக்­டர் ஓங் சிட் சுங் ஆகி­யோ­ரு­டன் சேர்ந்து திரு தர்­மன் கள­மி­றங்­கி­னார். அத்­தேர்­தலில் 79.75% வாக்­கு­க­ளு­டன் வெற்­றி­பெற்று தமது அர­சி­யல் பய­ணத்­தைத் தொடங்­கி­னார் திரு தர்­மன்.

அர­சி­ய­லில் குதித்­தது ஏன் என்று கேட்­ட­தற்கு, சிங்­கப்­பூர் எதிர்­கொண்ட புதிய சவால்­க­ளுக்­குத் தீர்­வு­காண உதவ விரும்­பி­ய­தாக அவர் குறிப்­பிட்­டார்.

கல்வி அமைச்­சர், நிதி­ய­மைச்­சர், துணைப் பிர­த­மர், பொரு­ளி­யல், சமு­தா­யக் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர், இப்­போது மூத்த அமைச்­சர் என அமைச்­ச­ர­வை­யில் பல பொறுப்­பு­களை ஏற்­றுள்­ளார் திரு தர்­மன்.

விளையாட்டில் பெருநாட்டம்

பின்­னா­ளில் அர­சி­ய­லில் குதிப்­பார் என்­ப­தற்கு இள­வ­ய­தி­லேயே திரு தர்­ம­னி­டத்­தில் சில அறி­குறி­கள் தெரிந்­தன.

ஆங்­கிலோ-சீனப் பள்­ளி­யில் படித்­த­போது, திரு தர்­மன் படிப்­பில் துளி­யும் நாட்­ட­மில்­லா­த­வ­ராக இருந்­தார் என்று 2004ல் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளி­யிட்ட செய்தி கூறு­கிறது.

ஆனால், திரு தர்­ம­னுக்கு மருத்­து­வம் படிக்க அறவே ஆர்­வம் இல்லை. மாறாக, ஹாக்கி, காற்­பந்து, கிரிக்­கெட், கைப்­பந்து, செப்­பாக் தக்­ராவ், ரக்பி, திடல்­தட போட்டிகள் என விளை­யாட்­டின்­மீது பேரார்­வம் கொண்­டி­ருந்­தார். பெரும்­பா­லும் எல்லா நாளும் இவர் விளை­யா­டு­வ­தற்கு நேரம் செல­வ­ழித்­தார்.

ஆனால், 17வது வய­தில் தீவிர ரத்த சோகை­யால் பாதிக்­கப்­பட, இவ­ரது விளை­யாட்­டுக் கன­வு­கள் நொறுங்­கின. அதற்­கா­கப் பல ஆண்­டு­க­ளாக ஒரு நாளைக்கு 25 மாத்­தி­ரை­களை இவர் எடுத்­துக்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது.

திரு தர்­மன் தீவிர வாச­க­ரும்­கூட; அவ்­வப்­போது கவி­தை­யும் எழு­தி­னார். பள்­ளித்­தோ­ழர்­கள் இரு­வ­ரு­டன் சேர்ந்து 1978ஆம் ஆண்­டில் வெளி­யிட்ட கவி­தைத் தொகுப்­பில் இவரின் நான்கு கவி­தை­கள் இடம்­பெற்­றன. அப்­போது, தேசிய நூல­கத்­தில் இளம் எழுத்­தா­ளர்­கள் வட்­டத்­தி­லும் அவர்­கள் இடம்­பெற்­றி­ருந்­த­னர்.

அர­சி­யல் செல்­வாக்கு

தேர்­தல் முடி­வு­களை வைத்­துப் பார்க்­கை­யில், திரு தர்­மன் செல்­வாக்­கு­மிக்க அர­சி­யல்­வா­தி­களில் ஒரு­வ­ரா­கத் திகழ்­கி­றார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்­த­லில், இவர் தலை­மை­யி­லான மசெக அணி ஜூரோங் குழுத் தொகு­தி­யில் 79.29% வாக்­கு­க­ளைப் பெற்­றது.

திரு தர்­மனே அடுத்த பிர­த­மர் என்று ஊக­மும் அவ்­வப்­போது எழுந்­தன.

கடந்த 2016ஆம் ஆண்டு நடத்­தப்­பட்ட ஒரு கருத்­தாய்­வில் பங்­கேற்­றோ­ரில் 69 விழுக்­காட்­டி­னர் திரு தர்­மன் சிங்­கப்­பூ­ரின் அடுத்த பிர­த­ம­ரா­வதை ஆத­ரிப்­ப­தா­கத் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

ஆனால், திரு தர்­மன் அதனை ஏற்க மறுத்­து­விட்­டார்.

“கொள்கை வகுப்­பில், இளம் அமைச்­சர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தில், பிர­த­ம­ருக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தில் நான் சிறந்­த­வன். ஆனால், பிர­த­ம­ராக இருப்­ப­தில் நான் சிறந்­த­வ­னல்­லன். அது நான் இல்லை,” என்று திரு தர்மன் அப்­போது கூறி­னார்.

உல­க­ள­வில் நன்­ம­திப்பு

அனைத்­து­ல­கப் பண நிதி­யத்­தின் அடுத்த தலை­வ­ரா­கத் திரு தர்மன் நிய­மிக்­கப்­ப­ட­லாம் என்று அனைத்­து­லக ஊட­கங்­கள் கடந்த 2019ஆம் ஆண்டு செய்தி வெளி­யிட்­டன.

தமது பொதுச் சேவைக் காலத்­தின்­போது, திரு தர்­மன் பொரு­ளி­யல், நிதிச் சீர்­தி­ருத்­தத்­திற்­கான பல்­வேறு அனைத்­து­லக மன்­றங்­க­ளின் தலை­வ­ரா­கச் செய­லாற்றி இருக்­கி­றார்.

அனைத்­து­ல­கப் பண, நிதிக் குழு­வின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட முதல் ஆசி­யர் என்ற பெரு­மைக்கு இவரே சொந்­தக்­கா­ரர்.

ஐநா தலைமைச் செயலாளரால் ஏற்படுத்தப்பட்ட உயர்நிலை ஆலோசனைக் குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.

கொவிட்-19 பரவலின்போது, பெருந்தொற்றுத் தயார்நிலை, நடவடிக்கை உலக நிதிக்கான ஜி20 உயர்நிலைத் தன்னிச்சைக் குழுவின் இணைத் தலைவராகவும் திரு தர்மன் பொறுப்பேற்றிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!