பேஷோரில் 7,000 புதிய வீடுகள்; 2024 பிற்பகுதியில் இரண்டு பிடிஓ திட்டங்கள் அறிமுகம்

பிடோக் நகரின் விரிவாக்கமாக அமையவிருக்கும் பேஷோர் வட்டாரத்தில் புதிதாக ஏறக்குறைய 7,000 வீடுகள் கட்டப்படவிருக்கின்றன.

குடியிருப்பாளர்கள், நீர்முகப்பு, நகர்ப்புறக் காட்சிகளைக் காணும் வாய்ப்புடன் இந்த வீடுகள் கட்டப்படும்.

அடுத்த ஆண்டின் (2024) பிற்பாதிக்குள் அப்பகுதிக்கான முதல் இரண்டு பிடிஓ திட்டங்களின்கீழ் வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.

60 ஹெக்டர் பரப்பளவிலான நிலத்தில் கட்டப்படவிருக்கும் 10,000 வீடுகளின் ஒரு பகுதியாக அவை அமையும்.

அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டுக்கும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேக்கும் இடைப்பட்ட அந்த நிலப்பரப்பு, நிலமீட்புத் திட்டத்தின்கீழ் உருவான நிலப்பகுதியின் ஓர் அங்கமாகும்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) 7,000 வீடுகளோடு மேலும் 3,000 தனியார் வீடுகளும் அந்த நிலப்பகுதியில் அமையவிருக்கின்றன.

அடுத்த ஆண்டு பிடிஓ திட்டத்தின்கீழ் ஏறக்குறைய 1,400 வீடுகள் விற்பனைக்கு விடப்படும். ஈரறை, மூவறை, நான்கறை வீடுகளும் அவற்றில் அடங்கும் என்று வீவக திங்கட்கிழமை தெரிவித்தது.

இந்த வீடுகளில் முழு உயரச் சன்னல்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவை நோக்கிய வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் வீட்டிலிருந்தபடியே நீர்முகப்புக் காட்சிகளைக் காணலாம். பிடோக் நகரை நோக்கிய வீடுகளில் வசிப்போர் நகர்ப்புறக் காட்சிகளைக் காண முடியும்.

பிரைம், பிளஸ் வகைகளைச் சேர்ந்த இவ்வீடுகளை வாங்குவோர் 10 ஆண்டுகள் அங்கு குடியிருப்பது கட்டாயம். மறுவிற்பனை தொடர்பான இத்தகைய விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படும்.

மரின் பரேட் வட்டாரத்தில் ஏற்கெனவே கட்டப்பட்ட வீவக வீடுகளுக்குப் பிறகு, ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் முதல்முறையாக பொது வீடமைப்புத் திட்டத்தின்கீழ் பேஷோர் வீடுகள் கட்டப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.

மேம்பட்ட முறையில் அனைவரையும் உள்ளடக்கிய அக்கம்பக்கப் பேட்டைகளை ஊக்குவிக்கும் வகையில் இப்பகுதியில் வாடகை வீடுகள் உட்பட பல்வேறு வகையான வீடுகள் அமைந்திருக்கும் என்றார் அவர்.

2030களின் நடுப்பகுதியில் பேஷோர் குடியிருப்புப் பேட்டையில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான வீடுகளிலிருந்து, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் புதிதாக அமையவிருக்கும் பேஷோர், பிடோக் சவுத் ரயில் நிலையங்களுக்கு ஐந்து நிமிடங்களில் நடந்து செல்ல இயலும் என்று வீவக தெரிவித்தது. அந்த நிலையங்கள் முறையே 2024, 2025ஆம் ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்.

கார்கள் குறைவான வட்டாரமான பேஷோரில் அமைக்கப்படும் சைக்கிளோட்டப் பாதைகளும் நடைபாதைகளும் 150 கிலோமீட்டர் நீளமான பூங்கா இணைப்புப் பாதையுடன் இணைக்கப்படும்.

பேஷோரில் கட்டப்படும் வீடுகள், நீடித்த நிலைத்தன்மை அம்சங்களுடன் கூடிய வடிவமைப்பைக் கொண்டவை என்று வீவக கூறியது.

எடுத்துக்காட்டாக, வீடுகளின் கூரைகளில் சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் கட்டடங்களிலிருந்து தானியக்க முறையில் கழிவுகளை அகற்றும் கட்டமைப்பு அமைக்கப்படும் என்றும் அது கூறியது.

பேஷோர் வட்டாரக் குடியிருப்பாளர்கள் வீட்டிலிருந்தபடியே நீர்முகப்பு, நகர்ப்புறக் காட்சிகளைக் காணும் வகையில் வீடுகள் கட்டப்படும். சித்திரிப்பு: வீவக
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!