வீவக: 2023ல் வாடகை வீட்டில் வசித்த 950 குடும்பங்கள் வீடு வாங்கின

அரசாங்க வாடகை வீடுகளில் வசித்த கிட்டத்தட்ட 8,300 குடும்பங்கள் 2014 முதல் 2023 வரை கடந்த பத்தாண்டுகளில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் உரிமையாளர்களாக மாறியுள்ளனர்.

கடந்த 2023ல், வாடகை வீடுகளில் வசித்த கிட்டத்தட்ட 950 குடும்பங்கள் வீடுகளை வாங்கின. இது 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கொவிட்-19 கொள்ளைநோய் பரவத்தொடங்கியலிருந்து ஆக அதிகமான எண்ணிக்கை என்று பிப்ரவரி 8 அன்று வீவக கூறியது.

இது 2022ல் வீவக வீடு வாங்கிய 700க்கும் மேற்பட்ட குடும்பங்களைவிட அதிகம். 2017 முதல் 2021 வரை அரசாங்க வாடகை வீடுகளில் வசித்த ஏறக்குறைய 4,500 குடும்பங்கள் வீடுகளின் உரிமையாளர்களானதாக 2022ல் வீவக தெரிவித்தது.

2023ல் சொந்த வீட்டைப் பெற்ற 950 குடும்பங்களில், ஐந்தில் நான்கு குடும்பங்கள் வீவகவிடமிருந்து வீட்டை வாங்கின. ஏனைய குடும்பங்கள் மறுவிற்பனைச் சந்தையில் வாங்கின.

மூன்றில் இரண்டு பங்கினர் முதல்முறையாக வீடு வாங்குபவர்களுக்கான $80,000 வரையிலான மத்திய சேமநிதி வீட்டு மானியத்தைப் பெற்றனர்.

950 வாடகை வீட்டுவாசிகளில் கிட்டத்தட்ட 80 பேர் ‘ஸ்டெப்-அப்’ வீட்டு மானியத்தைப் பெற்றனர்.

இது இரண்டாவது முறை வீட்டு மானியம் பெறுவோருக்கு, இரண்டு அல்லது மூவறை புதிய அல்லது மறுவிற்பனை வீடுகள் வாங்க வழங்கப்படும் $15,000 மானியம் ஆகும்.

டிசம்பர் 2023 நிலவரப்படி, மேலும் 2,100 வாடகைக் குடும்பங்கள் புதிய வீவக வீடுகளுக்கு முன்பதிவு செய்துள்ளன, அவை இன்னும் கட்டப்பட்டு வருகின்றன என்று வீவக கூறியது.

தற்போது, கிட்டத்தட்ட 50,000 குடும்பங்கள் பொது வாடகை வீடுகளில் வசிக்கின்றன.

சில குடும்பங்களுக்கு வீடு வாங்குவது என்பது நிதி கடப்பாட்டுக்கும் அப்பாற்பட்டது என்று 2019ஆம் ஆண்டிலிருந்து வீட்டு உரிமை ஆதரவுக் குழுவில் இருக்கும் 44 வயது திருவாட்டி லியு, கூறினார்.

“நிதி நிலைத்தன்மையில் மாற்றங்கள், மருத்துவப் பிரச்சினைகள், ஏனைய பராமரிப்பு பொறுப்புகள் அல்லது விவாகரத்து போன்ற வீடு வாங்குவதைத் தடுக்கும் மற்ற பிரச்சினைகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இந்தக் குழுவில் ஏழு வீவக அதிகாரிகள் உள்ளனர்.

தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகமது ஃபைஷல் இப்ராஹிம், 2023ல், அக்குழுவினர் கிட்டத்தட்ட 1,600 வாடகை வீட்டுவாசிகளைச் சந்தித்துவிட்டனர் என்றும் 1,000 பேர் என வைத்த இலக்கை அவர்கள் தாண்டியதாகவும் பிப்ரவரி 8 அன்று கூறினார்.

1,600 குடும்பங்களில், 120க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் புதிய வீடுகளில் குடியேறியுள்ளனர், கிட்டத்தட்ட 100 பேர் வீடுகளுக்கு முன்பதிவு செய்து தங்கள் சாவிகளைப் பெறக் காத்திருக்கின்றனர், என்று அவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!