தமிழ்மொழி விழா 2024 நிறைவு நிகழ்வாகக் கவியாற்றல்-2.0

1 mins read
c5737fb0-9f7a-4cfd-b4c9-4d37dd1701e5
நிகழ்ச்சியில் திரைக்கலைஞர் எழுத்தாளர் பொன்வண்ணனின் சிறப்புரை இடம்பெறும்.  - படம்: கவிமாலை

இவ்வாண்டு தமிழ்மொழி விழா, மார்ச் 28ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

அதனுடைய நிறைவு நிகழ்ச்சியாகக் கவிமாலை நடத்தும் கவியாற்றல் 2.0, ஏப்ரல் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறுகிறது.  நிகழ்வின் சிறப்பு அங்கமாக ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்கள் படைக்கும் கவிதை நாடகத்துடன் திரைக்கலைஞர் எழுத்தாளர் பொன்வண்ணனின் சிறப்புரை இடம்பெறும். சிறப்பு விருந்தினராக தமிழ்முரசு நாளிதழின் ஆசிரியர் த.ராஜசேகர் கலந்துகொள்கிறார்.

மேலும் மாணவர்கள் படைக்கும் சிறப்பு நிகழ்வுகளுடன் சுவையான அங்கங்களும் இடம்பெறவிருக்கின்றன.   தமிழ்ச் சான்றோர் கணையாழி விருது, தங்கமுத்திரை விருது, மாணவர்கள் பரிசளிப்பு ஆகியவையும் உண்டு.

இந்த நிகழ்விற்கு அனுமதி இலவசம். முன் பதிவு தேவையில்லை. அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்