காவல் துறையிடமிருந்தோ, வங்கியிடமிருந்தோ உடனடி தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதா? அது மோசடியா என்பதை அறிந்துகொள்ள இதோ வழிகள்

நம்பிவிடாமல் உடனே சரிபார்த்து நிராகரிக்கவும்

காவல் துறையிடமிருந்து மிரட்டல் அழைப்பா?

ஜான் (புனைப்பெயர்) 59 வயதான 2 குழந்தைகளின் தந்தையாவார். காவல் துறைக்கு உதவுவதாக அவர் எண்ணினார். தொடர்ச்சியாக அரசாங்க  அதிகாரிகளிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. இரண்டு காவல் துறை அதிகாரிகள், ஒரு நீதிமன்ற அதிகாரி, மற்றும் சிங்கப்பூர் நிதி ஆணையத்தைச் (MAS) சேர்ந்தவர் என்று கூறிக்கொண்ட ஒரு கணக்காய்வாளர் ஆகிய மூவரும் ஜானிடம் தொடர்புகொண்டு அவர் பண மோசடி விசாரணையில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பவைத்தனர். 

மோசடி குற்றத்துக்கான ஒரு புனையப்பட்ட போலி ஆவணமும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

நிதித் துறையில் 17 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ள சிங்கப்பூரிலேயே வாழ்ந்துவரும் ஜானுக்கு, தாம் எந்த குற்றமும் செய்யவில்லை என்ற நம்பிக்கை இருந்தது. இருப்பினும் அவருக்கு ஏற்பட்ட பயத்தினால் அவரது நற்பெயரை காப்பாற்றிக்கொள்ள அவர் முடிவெடுத்தார். எனவே, தனிப்பட்ட வங்கி விவரங்களை விசாரணைக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு அவர் மோசடிக்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டார். 

சுமார் 1 மில்லியன் வெள்ளிக்குமேல் அவர் இழந்திருப்பார். ஆயினும் ஜானின் கணக்கை பயன்படுத்தி இந்த பரிவர்த்தனையில் ஏதோ முறைகேடு உள்ளது என்று சந்தேகப்பட்ட வங்கி ஊழியர், சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். 

இப்படிப்பட்ட அபாயத்திலிருந்து தப்பித்த சம்பவங்கள் கவலைக்குறிய போக்கை உணர்த்துகிறது. அரசாங்க அதிகாரிகள் போன்று செயல்படும் ஆள்மாறாட்ட மோசடியின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. இவ்வாண்டின் முதல் பாதியில் மட்டும் இவ்வகை குற்றத்துக்கான 368 புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்று சிங்கப்பூர் காவல் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் இவ்வாண்டு 320 புகார்கள் கூடுதலாகியுள்ளன. மேலும் இக்குற்றங்களில்தான் ஆக அதிகமாக சராசரியாக $116,000 தொகை இழக்கப்பட்டுள்ளது.  

இந்த வகை மோசடிகளில் ஏமாற்றப்பட்ட 65 விழுக்காட்டினர் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆவர். சிங்கப்பூர் அரசாங்க அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் மோசடிக்காரர்களிடம் இவர்கள் சிக்கி பாதிப்படைந்துள்ளனர். 

இவ்வகை மோசடியின் செயல்பாடு

குற்றச்செயலில் ஈடுபட்டதாக மிரட்டப்படுவதுடன், படிப்படியாக செயல்படும் ஏமாற்று முறை ஆள்மாறாட்ட மோசடியில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது என்று காவல் துறை கண்காணிப்பாளர், மோசடி பற்றிய பொதுக் கல்வி செயல்பாட்டு அலுவலகத்தின் இயக்குநர், திருவாட்டி ரோஸி அன் மெக்கின்டையர் கூறுகிறார்.

பாதிப்படைந்தோர் பயத்துக்குள்ளாகி மோசடிக்காரர்களின் பணக் கோரிக்கைகளுக்கு பணிந்துவிடுகின்றனர். 

பாதிப்படைவோரிடம் நம்பிக்கையைப் பெற, மோசடிக்காரர்கள் பல செயல்முறைகளை கையாளுகின்றனர்.

வாட்ஸ்அப் (WhatsApp) தகவல் தளத்தின் வழியாக, தங்கள் புகைப்படங்கள் உள்ளடங்கிய போலியாக தயாரிக்கப்பட்ட  சிங்கப்பூர் காவல் துறையின் அடையாள அட்டைகளை (வாரன்ட் கார்டு) அனுப்பிவைப்பார்கள்.

முறைகேடாக தயாரிக்கப்பட்ட சிங்கப்பூர் காவல் துறையின் முத்திரைகள் அடங்கிய கடிதங்களை அனுப்புவார்கள். அவற்றில் ஆரம்பத்தில்  அவர்கள் பேசிய தொலைபேசி உறையாடலில் குறிப்பிடப்பட்டதைப்போலவே பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் குற்றச்சாட்டோடு புனையப்பட்டு இருக்கலாம்.  

சிங்கப்பூர் காவல் துறை சீருடை அணிந்துகொண்டு அவர்கள் நேரடி காணொளி (வீடியோ) தொலைபேசி அழைப்புகளைச் செய்வார்கள். 

உண்மையான தகவல் பரிமாற்றத்துக்கும் மோசடிக்காரர்களின் முயற்சிகளுக்கு உள்ள வேறுபாட்டை எப்படி கண்டறிவது?

எந்த அரசாங்க அமைப்பும் உங்கள் வங்கிக் கணக்கை கட்டுப்படுத்தி செயல்படுத்தவோ, வங்கிக் கணக்கின் விவரத்தையோ, உங்கள் பணத்தை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றிவிடவோ கேட்கவே மாட்டார்கள் என்று காவல் துறை கண்காணிப்பாளர் திருவாட்டி ரோஸி அன் மெக்கின்டையர் கூறினார்.

எந்தவொரு சிங்கப்பூர் காவல் துறை அதிகாரியும் அவர்களது அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை அல்லது துறை சார்ந்த முத்திரை அடங்கிய ஆவணங்களை எவ்வித இணையத் தகவல் பரிமாற்றச் சாதனங்கள் வழியாக  அனுப்பவே மாட்டார்கள் எனவும் அவர் வலியுறுத்தினார். 

மோசடியை முறியடித்தல்

  • பாதிக்கபட்டவருக்கு அவர் கேட்காமலேயே வங்கி அதிகாரியிடமிருந்து அழைப்பு வருகிறது. அழைப்பில் வங்கிப் பரிவர்த்தனையை உறுதி செய்யும்படியோ அல்லது அங்கீகாரம் வழங்கவோ பாதிக்கப்பட்டவர் கேட்டுகொள்ளப்படுவார். 
  • அத்தகைய வங்கி கடன் பற்று அட்டையை வைத்திருக்கவோ அல்லது குறிப்பிட்ட பரிவர்த்தனையை செய்யவோ இல்லை என்று பாதிக்கப்பட்டவர் விளக்கியும் மற்றுமொரு மோசடிக்காரருக்கு அழைப்பு மாற்றப்படுகிறது. அந்த அடுத்த மோசடிக்காரர் அவர் ஒரு காவல் துறை அதிகாரி  அல்லது வேறு ஒரு அரசாங்க அமைப்பைச்  சேர்ந்தவர் என்று தம்மை அடையாளம் காட்டிக்கொள்வார்.
  • பண மோசடி போன்ற குற்றம் சம்பந்தப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் பாதிக்கப்பட்டவரை இரண்டாம் வகை மோசடிக்காரர் அழைத்து, தண்டனைக்கு ஆளாகவிருக்கும் சாத்தியத்தைப் பற்றி தெரிவிப்பார். பிறகு, குற்றம் மிகத் தீவிரமான வகைப்படுத்தப்பட்டுள்ளதால், (மூன்றாம் மோசடிக்காரரான) மேல் அதிகாரியிடம் பாதிக்கப்பட்டவர் பரிந்துரைக்கப்படுவார்.
  • மூன்றாம் நிலை மோசடிக்காரர், விசாரணையின் பகுதியாக பாதிக்கப்பட்டவரின் வங்கி விவரங்களை கேட்டுக்கொள்வார் அல்லது ஒரு மூன்றாம் நபர் வங்கிக் கணக்குக்கு பணத்தை பரிவர்த்தனை வழி மாற்றி அனுப்பச் சொல்வார். 
  • விசாரணை முடிவடைந்ததும் பாதிக்கபட்டவருக்கு அவரது பணம் திரும்ப அனுப்பிவைக்கப்படும் என்று உறுதி கூறப்படும். 
  • அதிகாரப்பூர்வ வழிகளில் வங்கியிடமோ, சிங்கப்பூர் காவல் துறையிடமோ சோதித்து சரிபார்க்கும்போதுதான், மோசடிக்கார அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியாததை பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்துகொள்வார்கள். 

உங்களையும் அன்புக்குரியோரையும் பாதுகாக்க நீங்கள் என்ன செய்யலாம்.

பாதுகாப்பு அம்சங்களுடன் ஸ்கேம்ஷீல்டு தற்காப்பு செயலியை சேர்த்துக்கொள்ளுங்கள்

ஸ்கேம்ஷீல்டு செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு, பாதுகாப்பு அரணாக, 2 அம்ச அல்லது பல நிலைகளுக்கான உறுதிப்பாடுகளை வங்கிச் செயலிகளுக்கும், சமூக ஊடக சிங்பாஸ் கணக்குகளுக்கும் முறையாக அமைத்துக்கொள்ளுங்கள். பேலா (PayLah),பேநவ் (PayNow), உட்பட்ட இணைய வங்கி பரிவர்த்தனைகளுக்கு உச்ச வரம்பை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.

அதிகாரத்துவ வழிகளில் மோசடிக்கான அறிகுறிகளை சோதித்துக்கொள்ளுங்கள்

மோசடிக்கான அறிகுறிகளை அதிகாரப்பூர்வ வழிகளில் அறிந்துகொள்ளுங்கள். ஸ்கேம்ஷீல்டு வாட்ஸ்அப் போட் (ScamShield WhatsApp bot) செயலியை go.gov.sg/scamshield-bot  என்ற இணையத்தளத்தில் பயன்படுத்துங்கள். மோசடித் தடுப்பு நேரடி உதவி தொலைப்பேசி எண் 1800-722-6688  அலுவலக நேரத்தில் அழையுங்கள். மோசடி அறிவிப்புகளுக்கான scamalert.sg இணையத்தளத்தை பார்வையிடுங்கள். எந்த காவல் துறை அதிகாரியோ, அரசாங்க அதிகாரியோ உங்கள் பணத்தை எந்த வங்கிக் கணக்குக்கும் அனுப்பிவைக்கச் சொல்லமாட்டார். அலுவலக நேரத்துக்கு பிறகு காவல் துறையின் நேரடி உதவி எண் 1800-255-0000 அழைத்து மேல் விவரங்களையும் ஆலோசனைகளையும் கேட்டு அறியலாம்.

அரசு அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள்

மோசடிகளில் சிக்கியிருந்தால் உடனே காவல் துறையிடம் புகார் அளித்துவிடுங்கள். சமூக ஊடகத்தில் உருவாக்கப்பட்ட சந்தேகப்படும் கணக்குகளையும் பின்னணிக் குறிப்புகளையும் தவிர்த்து முடக்கிவிடுங்கள். நடந்த விவரங்களை குடும்பத்தினருடன், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேசிய குற்றத் தடுப்பு மன்றம் ஏற்படுத்தியிருக்கும் மோசடிக்கான வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து மோசடிக்கு எதிராக வழங்கப்படும் ஆலோசனைகளை அறிந்துகொள்ளுங்கள். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!