சிங்க‌ப்பூர்

அடுத்த தலைமுறை புதிய இஆர்பி கருவி வாகனத்தில் ஓட்டுநர் ஒருவர் தனது காலிருக்கும் பகுதியில் பொருத்திக்கொள்ளலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கு வாகனத்தில் ஓட்டுநர் கால் வைத்திருக்கும் பகுதி அதற்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கொல்லப்பட்ட லாரி விபத்து குறித்த விசாரணையில், “லாரி ஓட்டிக் கொண்டிருக்கும்போது ஜிபிஎஸ்-ஐ பார்த்தேன். அப்போது, கட்டுப்பாட்டை இழந்துவிட்டதால் இந்த விபத்து நிகழ்ந்தது” என்று லாரி ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஷார்ட் ஸ்திரீட் தமிழ் மெதடிஸ்ட் தேவாலயத்தைச் சார்ந்த ‘இந்திய நண்பர்கள் ஐக்கியம்’ அமைப்பு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு சிறப்பு விளையாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சி உட்லண்ட்ஸ் கிரைஸ்ட் சர்ச் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குநர் வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் ஆயுதங்கள் கொண்டு குழுவாகக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் இரண்டு ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.