ரேம்சி: இங்கிலாந்தைவிட எங்கள் அணி சிறந்தது

யூரோ 2016 போட்­டி­யில் இன்று இங்­கி­லாந்தை எதிர்­கொள்­கிறது வேல்ஸ் அணி. ஆனால் அதற்­குள் இங்­கி­லாந்து அணியை­விட எங்கள் அணி சிறந்தது என்று இங்­கி­லாந்து வீரர்­கள், ரசிகர் களின் வாயைக் கிள­றி­யி­ருக்­கிறார் வேல்ஸ் அணியின் நட்­சத்­திர விளை­யாட்­டா­ள­ரான ஏரோன் ரேம்சி. "எங்கள் அணி சிறந்த அணி என்று நான் நம்­பு­கி­றேன். நாங்கள் பல சோதனை­களைச் சந்­தித்­துள்ளோம். அவற்­றுக்­கான வெகு­ம­தியை இப்போது பெற்று வருகிறோம். "நாங்கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் மற்­ற­வர்­களுக்­காக போரா­டு­கி­றோம். ஒவ்­வொ­ரு­வ­ரும் மற்­ற­வர் ­களுக்­காக உயிரைக் கொடுத்து விளையாடு­கி­றோம்," என்று அவர் பெருமையாகக் கூறினார். இவ­ருக்கு சற்றும் குறைவில்லாத வண்ணம் வேல்ஸின் மற்றோர் நட்­சத்­திர வீரரான கேரத் பேல், போட்­டி­யில் வெல்ல வேண் டும் என்ற வேட்கை இங்­கி­லாந்து அணியை­விட வேல்ஸ் அணிக்கு நிரம்பவே உள்­ள­தாக மீண்டும் கூறி­யுள்­ளார்.

"எங்கள் அணி சிறந்த அணி என்பது எனக்­குத் தெரியும். அத னால், நாங்கள் சிறப்­பாக விளையாடும் பட்­சத்­தில் எங்க­ளால் இங் கிலாந்து அணியை வெற்றி கொள்ள முடியும் என்­ப­தும் எங்களுக்­குத் தெரிந்த­து­தான். "இங்­கி­லாந்து அணி­யி­ன­ருக்கு போட்­டி­யில் வெல்ல வேண்டும் என்ற வேட்கை இல்லை என்று நான் சொல்­ல­வில்லை. அவர்­களுக்­கும் அந்த வேட்கை நிச்­ச­யம் இருக்­கும். "அவர்­களை­விட அந்த வேட்கை அதிகம் என்­று­தான் சொல்ல வரு­கி­றேன். "காற்­பந்தா­கட்­டும் ரக்­பி­யா­கட் டும் வேறெந்த விளை­யாட்­டாக இருக்­கட்­டும் மேல்­நிலைக்கு செல்ல வேண்டும் என்ற வேட்கை வேல்­ஸி­டம் உள்ளது என்று எனக்­குத் தோன்­று­கிறது. "இங்­கி­லாந்து பெரிய நாடு என்­ப­து­டன் அவர்­களி­ட­மி­ருக்­கும் விளை­யாட்­டா­ளர் பட்­டி­ய­லும் பெரியது என்பதை நான் அறிவேன்.

"ஆனால் நம் இரண்டு அணிகளுக்­கும் உள்ள இடை­வெ­ளியை நாங்கள் வெகு­வா­கக் குறைத்து விட்டோம்," என்று கூறு­கிறார் கேரத் பேல். பின்னர், இங்­கி­லாந்து அணியைச் சேர்ந்த எந்­தெந்த வீரர்­கள் வேல்ஸ் அணியில் இடம்­ பெ­றத் தகு­தி­யுடை­வர்­கள் என்று கேட்­கப்­பட்ட கேள்­விக்கு "எவரும் இல்லை," என்று சிரிப்­பு­டன் கூறினார் பேல். எனினும் இவர்­களுக்­கெல்­லாம் பதிலடி கொடுக்­கும் வித­மா­கப் பேசிய இங்­கி­லாந்து வீரர் ஜேக் வில்­‌ஷி­யர், "இரண்டு அணி வீரர் களையும் நீங்கள் ஒப்­பிட்­டுப் பார்த்தால் நாங்கள்­தான் வெல்வோம் என்பது உங்களுக்­குத் தெரியும்," என்று தெரி­வித்­தார். யூரோ 2016 போட்­டி­களின் தகுதிச் சுற்று ஆட்­டங்களில் கேரத் பேல், ஏரோன் ரேம்சி இரு­வ­ரும் மொத்தம் 11 கோல்கள் போட்ட நிலையில் வேல்ஸ் அணி மிகுந்த நம்­பிக்கை­யு­டன் இருப்­பது நன்கு புலப்­படும் அதே வேளையில் தற்­போதைய இங்­கி­லாந்து அணி பல இளம், திறமை­மிக்க வீரர்­களைக் கொண்­டுள்­ளது என்பது கண்கூடு.

வேல்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கள் ஏரோன் ரேம்சி (இடது), கேரத் பேல். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!