ஆஸ்திரேலிய எஃப்1: போட்டாஸ் வெற்றி

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய எஃப்1 கார் பந்தயத்தில் மெர் செடிஸ் அணியின் வால்ட்டேரி போட்டாஸ் வெற்றி பெற்று உள்ளார்.
இரண்டாவது இடத்தை மெர்செடிஸ் அணியின் மற்றொரு வீரரான லூவிஸ் ஹேமில்டன் பிடித்தார்.
ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் மூன்றாவது இடத்தில் வந்தார்.
இது ஃபின்லாந்தைச் சேர்ந்த போட்டாஸின் நான் காவது எஃப்1 கார் பந்தய வெற்றியாகும்.
என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நான் பந்தயத்தை ஆரம்பித்த விதம் சிறப்பாக இருந்தது. இதுவே எனது மிகச் சிறந்த பந்தயமாகும்,” என்று பெருமிதத்துடன் கூறினார் போட்டாஸ்.
முதல் இரு இடங்களுடன் நேற்றைய பந்தயத்தில் மெர்செடிஸ் அணி புள்ளிகளைக் குவித்தது.