தமிழகத்துக்கு வெற்றியைத் தேடித் தந்த ஷாருக் கான்

புது­டெல்லி: கடைசி பந்­தில் ஐந்து ஓட்­டங்­களை அடித்­தால் வெற்றி, நான்கு அடித்­தால் போட்டி சம

நிலை­யாகி 'சூப்­பர் ஓவ­ருக்கு' செல்­லும்.

இத்­த­கைய பர­ப­ரப்­பான சூழ­லில், கால் திசை­யில் வந்த பந்தை உயரே தூக்கி அடித்து, ஆறு ஓட்­டங்­க­ளைப் பெற்­றுத் தந்­தார் தமி­ழக வீரர் ஷாருக் கான்.

இத­னை­ய­டுத்து, இறு­திப் போட்டி யில் கர்­நா­ட­காவை நான்கு விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்­டா­வது முறை­யாக சையது முஸ்­டாக் அலி டி20 கிண்­ணத்­தைத் கைப்­பற்­றி­யது

தமிழ்­நாடு கிரிக்­கெட் அணி.

ஒட்­டு­மொத்தத்தில், ஆக அதி­க­மாக தமி­ழக அணி மூன்று முறை அக்­கிண்­ணத்தை வென்­றுள்­ளது.

நேற்று நடந்த இறு­திப் போட்­டி­யில் பூவா தலை­யா­வில் வென்ற தமி­ழக அணி­யின் தலை­வர் விஜய் சங்­கர், முத­லில் தமது அணி

பந்­து­வீ­சும் என அறி­வித்­தார்.

அத­னைத் தொடர்ந்து, மணீஷ் பாண்டே தலை­மை­யி­லான கர்­நா­டக அணி முத­லில் பந்­த­டித்­தது. சாய் கிஷோர், சஞ்­சய் யாத­வின் சுழற்­பந்து வீச்­சில் திண­றிய அவ்­வணி, 32 ஓட்­டங்­க­ளுக்கு மூன்று விக்­கெட்­டு­களை இழந்­தது.

ஆனா­லும், அபி­னவ் மனோ­கர் (46), பிர­வீண் துபே (33) கைகொ­டுக்க, கர்­நா­டக அணி 20 ஓவர்­களில் ஏழு விக்­கெட் இழப்­பிற்கு 151 ஓட்­டங்­களை எடுத்­தது.

இலக்கை விரட்­டிய தமி­ழக அணிக்கு அதி­ர­டித் தொடக்­கம் கொடுத்­தார் ஹரி நிஷாந்த். 12 பந்துகளில் 23 ஓட்­டங்­களை

விளா­சிய துர­திர்ஷ்­ட­வ­ச­மாக 'ரன் அவுட்' முறை­யில் ஆட்­ட­மி­ழந்­தார்.

அதி­ரடி ஆட்­டக்­கா­ரர் ஷாருக்­கான் இருந்­த­தால் தமி­ழக வீரர்­கள் நம்­பிக்கை இழக்­க­வில்லை.

அந்த நம்­பிக்­கையை அவ­ரும் காப்­பாற்­றி­னார்.

கடைசி ஓவ­ரில் 16 ஓட்­டங்­களை எடுத்து, தமி­ழக அணி வெற்­றி­யைச் சுவைத்­தது.

15 பந்­து­களில் ஒரு பவுண்­டரி, மூன்று சிக்­ச­ரு­டன் 33 ஓட்­டங்­களை விளா­சி­னார் ஷாருக். எதிர்­

பார்த்­ததுபோல, அவ­ருக்கே ஆட்ட நாய­கன் விரு­தும் கிடைத்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!