சிங்கப்பூர் எஃப் 1: ஃபெராரியின் லெக்லர்க் முதலிடம்

மூவாண்டு இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூரில் அரங்கேறும் ஃபார்முலா 1 இரவு நேரப் பந்தயத்தின் தகுதிச் சுற்றில் முதலிடத்தில் வந்துள்ளார் ஃபெராரியின் சார்ல்ஸ் லெக்லர்க்.

மொனோக்கோவைச் சேர்ச்த லெக்லர்க்கிற்குப் பின்னால் இரண்டாம் இடத்தில் முடித்தவர் ரெட் புல்லின் செர்ஜியோ பெரெஸ்.

மெர்சிடீசின் லூயிஸ் ஹேமில்ட்டன் மூன்றாவதாக வந்தார்.

இதற்கு முன்பு கடைசியாக 2019ஆம் ஆண்டு எஃப் 1 இரவு நேரப் பந்தயம் சிங்கப்பூரில் நடைபெற்றது.

அப்போது ஃபெராரியுடன் இருந்து பந்தயத்தை வென்ற சபேஸ்டியன் வெட்டல் சனிக்கிழமையன்று (1 அக்டோபர்) நடைபெற்ற தகுதிச் சுற்றில் 11வது இடத்தில் முடித்தார். 

சிங்கப்பூர் எஃப் 1 விருதை ஆக அதிக முறை வென்றவர் என்ற பெருமையைப் பெற்றிருப்பவர் வெட்டல்.

இந்த எஃப் 1 பருவத்தில் முன்னணி வகிக்கும் ரெட் புல்லின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் எட்டாவது இடத்தில் வந்தார். 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!