அதிர்ஷ்டம் அர்ஜென்டினா பக்கம்

உலகக் கிண்ணக் காற்பந்து

தோஹா: இறு­திக் கட்­டம் நெருங்க நெருங்க உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­கள் விறு­வி­றுப்­பா­க­வும் பர­ப­ரப்­பா­க­வும் அமைந்து, ரசிகர்­க­ளுக்­குப் பெரு­வி­ருந்து படைத்து வரு­கின்­றன.

நேற்று முன்­தி­னம் இரவு நடந்த முதல் இரண்டு காலி­றுதி ஆட்­டங்­களும் கூடு­தல் நேரத்­தை­யும் தாண்டி, பெனால்டி வாய்ப்­பு­கள்­வரை சென்றன.

பெனால்டி வாய்ப்­பு­களை எடுக்­கும்­போது பதற்­றத்­தில் முன்­னணி வீரர்­களும் கவிழ்ந்­து­வி­டக்­கூ­டும் என்­ப­தால், ‘முடிவு எப்­படி அமை­யுமோ?’ என உல­கெங்­கு­முள்ள காற்­பந்து ரசி­கர்­கள் தவிப்­பில் ஆழ்ந்­த­னர்.

லுசெய்ல் அரங்­கில் நடந்த நெதர்­லாந்து அணிக்­கெ­தி­ரான காலி­றுதி ஆட்­டத்­தில் அர்­ஜென்­டி­னா­விற்கு அதிர்ஷ்­டம் கைகொ­டுத்­தது என்று சொன்­னால் அது மிகை­யா­காது.

உல­கின் முன்­னணி ஆட்­டக்­கா­ர­ரா­கத் திகழ்ந்­த­போ­தும் உல­கக் கிண்­ணத்தை ஒரு­மு­றை­கூட வெல்­லா­தது அர்­ஜென்­டினா அணித்­தலை­வ­ரான லய­னல் மெஸ்­ஸிக்கு ஒரு மனக்­கு­றை­யாக இருந்­து­வ­ரு­கிறது. 35 வயது ஆகி­விட்­ட­தால் இதுவே அவர் பங்­கேற்­கும் கடைசி உல­கக் கிண்­ண­மாக இருக்­கக்­கூடும்.

அத­னால், இம்­முறை வாகை சூடியே தீரு­வது எனக் கங்­க­ணம் கட்­டிக்­கொண்டு, அணியை முன்­னின்று வழி­ந­டத்தி வரு­கி­றார் மெஸ்ஸி.

அவ்­வ­கை­யில், காலி­றுதி ஆட்­டத்­தி­லும் தமது அணிக்­காக விழுந்த முதல் கோலுக்கு அவரே முக்­கி­யக் கார­ண­மா­கத் திகழ்ந்­தார். ஆட்­டத்­தின் 35வது நிமி­டத்­தில் மெஸ்ஸி அனுப்­பிய பந்தை நேர்த்­தி­யாக வலைக்­குள் தள்ளி அர்­ஜென்­டி­னா­விற்கு முன்­னிலை பெற்­றுத் தந்­தார் மொலினா.

இரண்­டாம் பாதி­யில், 73வது நிமி­டத்­தில் அர்­ஜென்­டி­னா­விற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்­தது. இவ்­வ­ளவு முக்­கி­ய­மான ஆட்­டத்­தி­லும் எப்­படி பதற்­ற­மே­யின்றி பெனால்­டியை எடுக்க முடி­கிறது என ரசி­கர்­களை வியக்க வைக்­கும் வகை­யில், மிக எளி­தாக கோல­டித்­தார் மெஸ்ஸி.

அதற்கு ஐந்து நிமி­டங்­க­ளுக்­குப் பிறகு நெதர்­லாந்­தின் முன்­னணி தாக்குதல் ஆட்­டக்­கா­ரர் மெம்­ஃபிஸ் டிப்­பாய்க்­குப் பதி­லா­கக் கள­மி­றங்­கிய வெஹோஸ்ட் ஆட்­டத்தின் போக்­கையே மாற்­றி­னார்.

83வது நிமி­டத்­தில் தலை­யால் முட்டி பந்தை வலைக்­குள் தள்ளி, நெதர்லாந்தின் முதல் கோலை அடித்தார் அவர். அதன்­பின், இடை­நி­றுத்­தத்­திற்­கான கூடு­தல் நேரத்­தின் 11வது நிமி­டத்­தில் மீண்­டும் அவர் கோல­டித்து, ஆட்­டத்தை 2-2 எனச் சம­னுக்­குக் கொண்­டு­வர, அர்­ஜென்­டினா வீரர்­களும் ரசி­கர்­களும் அதிர்ச்­சி­யில் உறைந்­த­னர்.

அதன்­பின், கூடு­தல் அரை­மணி நேர ஆட்­டத்­தில் இரு­த­ரப்­பும் கோல் போடாததால் வெற்­றி­யா­ளரை முடிவு­செய்ய பெனால்டி வாய்ப்­பு­கள் முறை கையா­ளப்­பட்­டது. அதில் 4-3 என்ற கோல் கணக்­கில் அர்­ஜென்­டினா முன்­னிலை பெற்று, அரை­ இ­றுதி வாய்ப்பை உறு­தி­செய்­தது.

வரும் செவ்வாய்க்கிழமை பின்னிரவு நடக்கும் அரையிறுதியில் குரோவேஷியாவை அர்ஜென்டினா எதிர்கொள்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!