புது பயிற்றுவிப்பாளரைத் தேடும் பிரேசில் காற்பந்து அணி

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் காற்பந்து அணிக்கு இடைக்கால பயிற்றுவிப்பாளராக செயல்பட்டு வந்த பெர்ணான்டோ டினிஸ் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஓர் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் பொறுப்பை ஏற்ற டினிசால் பிரேசில் அணிக்கு போதிய வெற்றிகளைக் குவித்து தர முடியவில்லை.

அவருக்கு கீழ் பிரேசில் அணி 2026 உலகக் கிண்ணப் போட்டிக்கான 6 தகுதி ஆட்டங்களில் விளையாடியது.அதில் மூன்று தோல்வி, இரண்டு வெற்றி, ஒரு சமநிலையை பிரேசில் கண்டது.

தென்னமெரிக்கா நாடுகளுக்கான 2026 உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பட்டியலில் தற்போது பிரேசில் ஆறாவது இடத்தில் உள்ளது.

பிரேசில் அணிக்கு நீண்ட நாள் அடிப்படையில் வேலை செய்யும் பயிற்றுவிப்பாளர் தான் தேவை என்று பிரேசில் காற்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

இன்னும் சில நாள்களில் பிரேசில் காற்பந்து அணிக்கான புதிய பயிற்றுவிப்பாளர் அறிவிக்கப்படலாம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!