ரியாத்: காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியின் இன்டர் மயாமி குழுவுக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் அல் நசர் குழுவுக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் அல் நசர் 6-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மயாமியை வீழ்த்தியது.
ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ரொனால்டோ விளையாடவில்லை. ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்களில்தான் மெஸ்ஸியும் களமிறங்கினார்.
ஆட்டத்தின் 3, 10, 12 ஆகிய நிமிடங்களில் கோல்கள் அடித்து இன்டர் மயாமியைக் கலங்கடித்தது அல் நசர்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் அல் நசர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 51, 68, 73வது நிமிடங்களில் கோல்கள் அடித்து ஆட்டத்தை தன்வசப்படுத்தியது.