கராக்காஸ்: ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் பிரேசில், பராகுவேயிடம் தோல்வியடைந்தது.
லத்தீன் அமெரிக்க கண்டத்துக்கான தகுதிச் சுற்றில் எஞ்சியிருக்கும் நான்கு அணிகளில் பிரேசிலும் பராகுவேயும் அடங்கும். ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் நடைபெற்ற கடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் காற்பந்துப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது பிரேசில்.
பராகுவேக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பிரேசிலுக்குக் கிடைத்த கோல் வாய்ப்பை நழுவவிட்டார் இளம் நட்சத்திரம் என்ட்ரிக். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை என்ட்ரிக் கோலாக்கத் தவறினார்.
தகுதிச் சுற்றில் இந்த ஆட்டத்துக்குப் பிறகு பிரேசில், வெனிசுவேலாவைச் சந்திக்கும். பராகுவே அடுத்ததாக அர்ஜென்டினாவுடன் மோதும்.