தகாத நடு விரல் சைகை காட்டிய சிங்கப்பூர் ஆட்டக்காரர் மன்னிப்பு

https://www.straitstimes.com/singapore/player-from-s-pore-esports-team-…

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட தொழில்முறை மின்னணுவியல் விளையாட்டு (இ-ஸ்போட்ஸ்) குழுவான ‘பேப்பர் ரெக்ஸ்’-இல் அங்கம் வகிக்கும் விளையாட்டாளர் ஒருவர், ஸ்பெயினில் நடைபெற்ற ஒரு போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட எதிரணிக் குழுவினரைப் பார்த்து தகாத நடு விரல் சைகை காட்டியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இல்யா பெட்ரோவ் எனும் அந்த 22 வயது ரஷ்ய இளையர் உட்பட ஐவர் கொண்ட பேப்பர் ரெக்ஸ் குழு வெலோரெண்ட் சாம்பியன்ஸ் டூர் 2024:மாஸ்டர்ஸ் மட்ரிட் எனும் போட்டியில் பங்கேற்கிறது.

பேப்பர் ரெக்ஸ் குழுவும் ஸ்பெயினின் டீன் ஹீரோயிக்ஸ் குழுவும் மார்ச் 18ஆம் தேதி இரண்டாம் சுற்றில் சந்தித்தன. அதில் பேப்பர் ரெக்ஸ் குழு 2-1 என்ற ஆட்டக்கணக்கில் வென்றது. அப்போது பெட்ரோவ் அந்த தகாத நடு விரல் சைகையைக் காட்டினார்.

காணொளியில் பதிவான அந்தக் காட்சி இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டு சமூகத்தினரிடையே பகிரப்பட்டு, வெலோரெண்ட் ரசிகர்கள் சிலரிடையே ஆதரவைப் பெற்றாலும் பலர் அதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பெட்ரோவ் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

“நான் ஒவ்வொரு ரசிகரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ஒரு தொழில்முறை ஆட்டக்காரர் என்பதால் நான் அவ்வாறு செய்திருக்கக்கூடாது. அதற்காக மிகவும் வருந்துகிறேன்,” என்று பெட்ரோவ் கூறினார்.

மேலும் அவர் தனது டுவிட்டர் பதிவிலும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!