நிலச்சரிவு

இட்டாநகர்: அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திபெங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ரோயிங் – அனினி தேசிய நெடுஞ்சாலை அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மற்ற மாவட்டங்களில் இருந்து திபெங் மாவட்டம் துண்டிக்கப்பட்டது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் குறைந்தது 19 பேர் மாண்டுவிட்டனர் என்று உள்ளூர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 14) தெரிவித்தனர்.
கலிஃபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட கடும் புயல், நிலச்சரிவு ஆகியவற்றால், பிக் சுர் வட்டாரத்தில் அமைந்திருக்கும் நெடுஞ்சாலை 1ன் ஒரு பகுதி மார்ச் 30ஆம் தேதி இடிந்து சேதமடைந்தது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் திடீர் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் குறைந்தது 10 பேர் மாண்டனர்.
மணிலா: பிலிப்பீன்சின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாண்டோர் எண்ணிக்கை 37 ஆனதாக அந்நாட்டு அதிகாரிகள் பிப்ரவரி 11ஆம் தேதி தெரிவித்துள்ளனர்.