ஆசியா

குழப்பமான நிலையற்ற உலகச் சூழலில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்க சிங்கப்பூர், சொந்த அக்கறைகளுக்காக மட்டுமின்றி எல்லா நாடுகளின் இறையாண்மையையும் எல்லை சார்ந்த நெறிகளையும் மதித்து நடப்பது, உலகளாவிய பிரச்சினைகளை ஒன்றாகக் கையாள்வது, திறந்த மனப்பான்மையையும் பல தரப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருப்பதை ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டே இயங்குவதாக மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார்.
ஆசியாவின் நீர்மின்னாற்றல் உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சீனாவிலும் இந்தியாவிலும் நீர்மின்னாற்றல் உற்பத்தி வெகுவாகக் குறைந்திருப்பது இதற்கு முக்கியக் காரணம்.
உலக சுற்றுச்சூழல், சமூக சவால்களைச் சமாளிப்பதற்கான தீர்வுகளை ஆசியா உருவாக்குவதற்காக ‘ஆசிய அறப்பணிக் கூட்டமைப்பு’ என்ற ஒரு புதிய அமைப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது.
கோலாலம்பூர்: வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மாதத்துக்கு 2,000 டாலருக்கும் (2,640 வெள்ளி) குறைவான செலவில் வாழ்க்கையை நடத்த ஆகச் சிறந்த நாடு மலேசியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா ஆசியத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.