விதிமீறல்

மின்சாரத்தின் உதவியோடு இயங்கும் மின்சைக்கிள்கள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி இல்லாத சைக்கிள்கள் ஆகியவற்றை நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமையன்று (மே 24) பறிமுதல் செய்தது.
மனநல மருத்துவர் ஆங் யோங் குவான், தொழில் ரீதியாகத் தவறிழைத்துள்ளார் என்று மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மே 13ல் தீர்ப்பளித்தது.
நிலப் போக்குவரத்து ஆணையமும் போக்குவரத்துக் காவல்துறையும் இணைந்து கடந்த இரண்டு வாரங்களாக நடத்திய கூட்டு அமலாக்க நடவடிக்கையில், சாலைகளில் மிதிவண்டி ஓட்டுவது தொடர்பான விதிமுறைகளை மீறிய 22 பேர் பிடிபட்டனர்.
சேவை ஒப்பந்த மீறல், அலட்சியம் காரணமாகப் பராமரிப்புக் கடப்பாட்டு விதிமீறல் ஆகியவை தொடர்பில் கார்ட்லைஃப் நிறுவனத்திற்கு அதன் வாடிக்கையாளர் ஒருவரின் சார்பாக அவருடைய வழக்கறிஞர் கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுடெல்லி: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகார்களுக்கு விளக்கமளிக்கும்படி பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளித்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.