கல்வி

ஆசியான் அறக்கட்டளை, தெற்காசிய நாடுகளின் மின்னிலக்கக் கல்வியறிவு, விழிப்புணர்வு, தயார்நிலை விகிதங்கள் குறித்த ஆய்வறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.
தொழுகையை வழிநடத்தி, ஐயங்களைக் களைந்து ஆலோசனை வழங்குகின்றனர் அப்துல் கஃபூர் பள்ளிவாசலைச் சேர்ந்த இந்த இளம் சமயப் போதகர்கள். இவர்கள் தங்களது சேவையைப் பற்றியும் ரமலான் குறித்த தங்களின் உணர்வுகளையும் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர். 
வசதி குறைந்தோரைத் தூக்கிவிட நிதி வளங்களைப் பகிர்ந்துகொண்டால் மட்டும் போதாது, தொடர்புகள், வாய்ப்புகள் ஆகியவற்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
சிறப்புக் கல்வி ஆசிரியர்களின் சம்பளம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக உயரும். நாடாளுமன்றத்தில் இம்மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இந்தச் செய்தியைக் கேட்டு மகிழ்ந்தோரில் 30 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் சிறப்புக் கல்வியாளர் சாந்தா ராமனும் ஒருவர்.
ஒரு துறையின் மீதான ஆர்வமும் உந்துதலும் வாழ்வைக் கட்டியெழுப்ப அடிப்படையானது என ஆழமாக நம்புபவர், வணிக நிறுவனத்தில் அனைத்துலகச் சந்தை இணக்க அதிகாரியாக பணியாற்றும் நா.நாச்சம்மை.