சவூதி அரேபியா

துபாய்: ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானியர்கள் சிலர் உம்ரா புனிதப் பயணத்துக்காக ஏப்ரல் 22ஆம் தேதி சவூதி அரேபியா சென்றனர். இந்தத் தகவலை ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்டது.
கோழிக்கோடு: கேரளாவைச் சேர்ந்த அப்துல்ரஹீம் 2006ஆம் ஆண்டு சவுதி அரேபியா சென்றார். அங்கு அப்துல்லா என்பவரின் வீட்டில் கார் ஓட்டுநர் வேலை கிடைத்தது. அப்துல்லாவின் மாற்றுத்திறனாளி மகனையும் பராமரிக்கும் பொறுப்பு ரஹீமிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருநாள் சிறுவனைக் காரில் ரஹீம்அழைத்துச் சென்றபோது சிறுவனின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசக்குழாய் மீது ரஹீமின் கை தவறுதலாகப் பட்டதில் மயக்கமடைந்து பின்னர் பரிதாபமாக மரணமடைந்தான்.
துபாய்: சவூதி அரேபியாவுக்குச் செல்லும் சுற்றுப்பயணிகள், விண்வெளிப் பயணத்திற்காக 2026ஆம் ஆண்டில் பதிந்துகொள்ளலாம்.
புனித ரமலான் மாதம் மார்ச் 11ஆம் தேதி தொடங்குவதாக சவூதி அரேபியாவும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளும் அறிவித்துள்ளன.
ரியாத்: சவூதி அரேபியா, 2034ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்த அதிகாரபூர்வமாக விண்ணப்பித்துள்ளது.