கத்தார்

டோஹா: கத்தாரில் மரண தண்டனையை எதிர்நோக்கிய இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் எட்டு பேரின் தண்டனையை கத்தார் நீதிமன்றம் குறைத்து உள்ளது. தண்டனை விவரம் இன்னும் வெளியாகவில்லை. சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
தோஹா: கத்தாரில் எட்டு இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு பரிசீலனையில் இருப்பதாகவும் இதில் நல்ல தீா்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்தது.
புதுடெல்லி: கத்தார் நாட்டில் கடந்த ஓராண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு இந்திய அரசு தனது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிபடுத்தியிருக்கிறது.
சோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர், கத்தார் நிறுவனங்களுக்குக் கூடிய விரைவில் இரண்டு நாடுகளிலும் தொழில் தொடங்குவதற்கு மேலும் எளிமையாக இருக்கும். நீடித்து நிலைக்கத்தக்க தொழில்நுட்பங்கள், உணவுத் துறை, இணையப் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் அவை தொழில் செய்யலாம்.