தாய்மொழி

கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழ், சீனப் பள்ளிகள் தொடர்பில் சர்ச்சைகள் நிலவிவர, பல-பிரிவுகள் அடங்கிய ஒரு நாட்டின் கல்வி அமைப்புக்கு இத்தகைய கல்விக் கழகங்கள் பங்களிப்பதை அண்மைய ஆய்வு கண்டறிந்துள்ளதாக மலேசிய சீனக் கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் மா ஹாங் சூன் தெரிவித்துள்ளார்.
மர்மம், கற்பனை கலந்த உலகங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்லும் வல்லமை உடையவை, புதிதாக வெளிவந்துள்ள சிங்கப்பூர் தமிழ்ச் சிறுவர் நாவல்கள். உள்ளூர் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ‘காணாமல் போன கிழங்கு பாட்டி’, ‘டிராகனைத் தேடி,’ ‘அகிவா’ ஆகிய மூன்று தமிழ் நாவல்களையும் தேசிய கலைகள் மன்றமும் சிங்கப்பூர் புத்தக மன்றமும் கடந்தாண்டு இணைந்து வெளியிட்டன. எட்டு முதல் பன்னிரண்டு வயது வரையிலான மாணவ வாசகர்களை இம்முயற்சி மையப்படுத்தியது.
கோலாலம்பூர்: மலேசியாவின் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள, அம்னோ எனப்படும் ஐக்கிய மலாய்க்காரர் தேசிய அமைப்பு, ஜனநாயக செயல் கட்சி (டிஏ பி) ஆகிய இரு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பான பிரச்சினை பற்றி பேச உடன்பட்டுள்ளனர். இது, நீண்டகாலப் போட்டியாளர்களுக்கு இடையிலான நாகரிகமான பேச்சுவார்த்தையின் நம்பிக்கையான தொடக்கமாகக் கருதப்படுகிறது.
இரு புதிய பாலர் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கூடுதல் தாய்மொழிப் பாடங்கள் கற்பிக்கப்படும்.
சென்னை: உலகத் தாய்மொழி நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.